சில அறிவியல் உண்மைகள் உங்கள் பார்வைக்கு , .

முதலில் அந்த
உண்மைகளை பார்க்கலாம் .
அதற்கு பிறகு அதன் பின் இருக்கும்
டெக்னிக்கல்
விஷயங்களை பார்க்கலாம் . .


1 . காரில் தப்பி செல்லும்
ஒருவனை உடனடியாக கொல்ல
வேண்டுமானால் , சுலபமான வழி ,
அந்த காரின் பெட்ரோல்
டேங்கை துப்பாக்கியில்
சுடுவதுதான் . . இதனால் கார்
தீப்பற்றி வெடித்து சிதறும்… ( பல
சினிமாக்களில் இந்த
டெக்னிக்கை பயன்படுத்துகின்றனர் )

2 . மின்னல்
ஒரே இடத்தை இரு முறை தாக்காது

3 . எல்க்ட்ரிக்கல் கார்
பயன்படுத்தினால் , சுற்றுச்சூழல்
சீர்கேடு இருக்காது . .

4 நிலவின் ஒரு பகுதியில் சூரிய
ஒளி படுவதே இல்லை. .
அது எப்போதும் இருட்டாக
இருக்கும்.

5 பரிணாம வளர்ச்சி என்பது தாழ்ந்த
நிலையில் இருந்து உயர்ந்த
நிலைக்கு செல்வதே ஆகும். .
அதுதான் உலகில் இருக்கும்
எல்லா உயிர்களிலும்
நடந்து வருகிறது. . எல்லா உயிர்களும்
சிறப்பான
நிலையை நோக்கி செல்கின்றன . .

இந்த
உண்மைகளைப்பற்றி அலசுவதற்கு முன்
ஒரு விஷயம் . .
.
.
.
.
.
.
.
இவை எதுவும் உண்மை இல்லை…
ஆனால் உண்மை போல தோன்றும். .
பெரும்பாலும்
இவற்றை உண்மை என்றே நம்புகிறார்கள் . .
எல்லாவற்றையும்
இல்லாவிட்டாலும்
சிலதையாவது உண்மை என
நம்புபவர்கள் பலர்…
சரி . . விளக்கத்தை பார்க்கலாம்.

1 . பெட்ரோல் டேங்க் சுடப்பட்டதும்
கார்
வெடித்து சிதறுவதை சினிமாவில்
பார்த்து அதை உண்மை என
நம்புகிறோம் …
ஆனால் இது போல நடக்க
வாய்ப்பு மிகவும் குறைவே …
பெட்ரோல் முழுக்க
நிரம்பி இருந்தால் , சுடப்ப்ட்டதும்
தீப்பிடிக்கும் என நினைக்கிறோம். .
தவறு …
தீப்பிடிக்க இரண்டு விஷயங்கள்
தேவை . .
ஆக்சிஜன் , தீப்பொறி அல்லது சூடு . .
துப்பாக்கி குண்டில்
தீப்பொறி இருக்காது . . அதே போல
பெட்ரோல் நிரம்பி இருந்தால் அதில்
எரிய தேவையான ஆக்சிஜன்
இருக்காது … ஒரு உலோக
குண்டு வேகமாக மோதுவதால்
அதில்
துளை ஏற்படும் . . அவ்வளவே…
அபூர்வ நிகழ்வாக ,
துப்பாக்கி குண்டு காற்றின்
உராய்வால் வெப்பம் தூண்டப்பட்டு ,
அது டேங்கில் மோதும் நேரம்
ஆக்சிஜனும் இருந்தால் தீப்பிடிக்கும்
என்பது உண்மையே . .
இது நடக்க ஒரு சதவிகித
வாய்ப்புதான் இருக்கிறது .

2 . மின்னல் எப்பொதும் உயரமான
கட்டடங்கள் , மரங்களை தாக்கும். . சில
உயரமான கட்டடங்கள்
அடிக்கடி பாதிக்கப்படுவது ,
பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான்
தெரியும். .
பழைய காலங்களில், ஓர் உயரமான மரம்
தாக்கப்பட்டு கருகி இருக்கும்…
அதன் பின் மின்னல் அதில்
விழுந்திருக்காது … பக்கத்தில்
இருக்கும் வேறோரு உயரமான
மரத்தை தேடி சென்று அதன்
தலையில் இடி விழுந்து இருக்கும்
இதை வைத்து, ஒரே இடத்தில்
( ஒரே மரத்தை )
இரு முறை தாக்காது என நம்ப
ஆரம்பித்து விட்டார்கள் . .
ஒரு முறை , இரண்டாம்
முறை என்பது கணக்கல்ல …
உயரம்தான் முக்கியம். .
ஒரு முறை தாக்கப்பட்ட கட்டடம் ,
மீண்டும் உயரமாக கட்டப்பட்டால்,
மீண்டும் ஆபத்தை சந்திக்கும்
வாய்ப்பு இருக்கிறது . . அப்படி பல
கட்டடங்கள் ஆபத்தை சந்தித்தும்
வருகின்றன …
மரத்தை பொறுத்தவரை ,
தாக்கப்பட்டதும் ,
உயரத்தை இழப்பதுதான் அது மீண்டும்
தாக்கப்படாமைக்கு காரணம். . இதில்
மர்மம் எதுவும் இல்லை …

3 . எலெட்ரிக் கார் ஓடுவதால்
சீர்கேடு இல்லை என்பது போல
தோன்றினாலும் , அது ஓட
தேவைப்படும் மின்சாரம்
தயாரிக்கும்போது ஏற்படும்
சீர்கேட்டை மறந்து விடுகிறோம் . .
ரோட்டில் சுற்றுபுற
சீர்கேடு ஏற்படாது என்பது உண்மைதான் . .
ஆனால் இன்னொரு இடத்தில்
அது ஏற்படுகிறது என்பதே உண்மை. .
அதாவது நூறு கி மீ ஓடினால் ,
பெட்ரோல் கார் ஏற்படுத்தும்
சீர்கேடும், எலெக்ட்ரிக் கார்
ஏற்படுத்தும் சீர்கேடும் ஒன்றுதான். .
ஏற்படும் இடம் வெவ்வேறு . .
அந்த மின்சாரத்தை சூரிய
ஒளி மூலமோ ,
காற்றாலை மூலமோ தயாரித்தால்தான் ,
சீர்கேடு இல்லை என சொல்ல
முடியும் . .
நடைமுறையில் அப்படி இல்லை

4 . நிலவின் ஒரு பகுதியை நாம்
எப்போதும்
பார்க்கவே முடியாது என்பதே உண்மை …
சுழல் வேகங்கள்
ஒருங்கிணந்து போவதால் , நாம்
ஒரு பக்கத்தை மட்டுமே பூமியில்
இருந்து பார்க்க முடியும் .
ஆனால் சூரிய ஒளி படாது என
சொல்வதில் உண்மை இல்லை

5 உயிர் வாழ்வுக்கு தேவையான
வகையில் ஒத்துபோகும்
உயிரினங்களே எஞ்சுகின்றன . .
சிறப்பானது எஞ்சும்
என்பது இல்லை. .
பல சிறப்பான உயிரினங்கள்
அழிந்துள்ளன …
நாய் போன்ற விலங்கினங்கள் . , தம்
சிற்ப்பு தன்மை கொஞ்சம் கொஞ்சமாக
இழந்து வருகின்றன. . அப்போதுதான்
மனிதனுடன் ஒத்து போக முடியும் . .
மனிதன் கூட கொஞ்சம் கொஞ்சமாக
சில
சிறப்பு தன்மைகளை இழந்து வருகிறான். .
காரணம் இன்றைய
வாழவுக்கு அவை தேவை இல்லை …
எனவே பரிணாம
வளர்ச்சி என்பது சிறப்பை நோக்கி செல்வது அல்ல …
சூழ்நிலைக்கு ஏற்ப
ஒத்து போவதுதான்
தாக்குபிடிக்கும் …

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...