அமெரிக்காவில் 1960 ல் நடைபெற்ற 'இடியன் வழக்கே' உலகின் முதல் பொதுநல வழக்காக கருதப்படுகிறது.
1960 ம் ஆண்டின் மத்தியில் அமெரிக்க சிறையிலிருந்த இடியன் என்ற கைதி ஒரு மனுவை உயர்நீதி மன்றத்துக்கு
அனுப்பினான். அது ஒரு பெரிய மனுவோ அல்லது வழக்கறிஞர்களின் கடிதங்களோடு இணைந்ததோ அல்ல.. ஒரு ஒற்றைப் பக்க மனு...
ஆனால் அமெரிக்காவிலோ இது போன்ற மனுக்களை ஏற்பது என்பது மிகக் கடினமான நடைமுறை... உயர்நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அம்மனு வழக்கிற்காக ஏற்கப்படும்.
அதிசயம் ஆனால் உண்மை என்பது போல் இடியனின் மனு வழக்கிற்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இடியனின் பிரச்னை என்ன?
கீழ் நீதிமன்றம் அவனுக்கு தண்டனை கொடுத்தது. மேல் முறையீட்டு நீதிமன்றமும் அவனது தண்டனையை உறுதி செய்தது. இடியன் தன்னுடைய மனுவில் என்ன குறிப்பிட்டிருந்தானென்றால்...
இந்த நீதிமன்றங்கள் எனக்கு சரியான ஆலோசகர்களை அதாவது வழக்கறிஞர்களை நியமித்து வழக்காட உதவவில்லை. அதனால் தான் எனக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்பது தான்.
அவனது வாதத்தை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் அவனை விடுதலை செய்தது.
உலக வரலாற்றில் பொதுநல வழக்கினுடைய தொடக்கம் என்பது இதிலிருந்து தான் தொடங்கிற்று.