மனிதர்கள் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்புகின்றனர்.ஆனால், ஆபத்தான நிலையில், மனித உயிர்களை காப்பாற்ற முடியாது. அதனால் தான்,
விலைமதிப்பற்றது உயிர் என்கிறோம். விபத்து, பிரசவம், ஆப்பரேஷன் போன்ற நிகழ்வுகளில் மனிதருக்கு ரத்தம் தேவைப்படும். அந்த நேரத்தில் ரத்தம் கிடைக்கா விட்டால், அந்த நபர் இறந்து விடுவார். ஆபத்தான தருணத்தில்,போன் செய்தால் போதும், உங்களை நாங்கள் தேடி வந்து இலவசமாக ரத்தம் தானம் செய்கிறோம், என்று ரத்ததானத்தை தங்களின் வாழ்வின் லட்சியமாக கொண்டு, பிற உயிர்களுக்கு உயிர் கொடுத்து வரும் உத்தமர்களை பற்றி, தினமலர் "லைட் ரீடிங்' பகுதியில் அறிமுகம் செய்கிறோம். இதில் சிலர் 50 முறைக்கும் மேல் ரத்ததானம் செய்து சாதனை படைத்துள்ளனர். நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் வாயுவை, நம் உடலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்வதோடு, கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது ரத்தம். ரத்தம் இன்னொரு மனிதனுக்கு வாழ்வளிக்கும் அதிசய திரவம். ரத்தம் என்னும் அதிசய திரவத்தை, நாம் இன்னும் செயற்கையாக உருவாக்க இயலவில்லை.நாம் ஒவ்வொரு முறை தானமாகக் கொடுக்கும் ரத்தம், நான்கு உயிர்களை காக்கும்.
எம்.துரை, பொறியியல் கல்லூரி பேராசிரியர், தேனி:
இது வரை நான் 75 முறை ரத்ததானம் செய்துள்ளேன். ஆண்டிற்கு நான்கு முறை ரத்ததானம் செய்கிறேன். எனது பிறந்தநாள், திருமணநாள், குழந்தைகள் பிறந்த நாள் போன்ற தினங்களில் ரத்ததானம் செய்கிறேன். 1988 ல் நான் கல்லூரியில் படிக்கும் போது விளையாட்டாக ஆரம்பித்த இந்த சேவை தற்போது, வாழ்க்கையின் கொள்கையாக மாறிவிட்டது. ஆபத்தான நிலையில் பிரசவத்தில் இருந்த பெண்ணிற்கு நான், ஒரு முறை ரத்ததானம் செய்தேன். அந்த பெண்ணிற்கு ஆபத்தான கட்டத்தை கடந்து அழகான குழந்தை பிறந்தது. தாயும்,சேயும் நலமுடன் வீடு திரும்பினர். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். எங்கள் மாணவர்கள், மதுரை, கொச்சி போன்ற இடங்களுக்கும் சென்று ரத்ததானம் செய்து வருகின்றனர். இவரது சேவையை பயன்படுத்த வாழ்த்த- 90927-27356.
வடுகபட்டி டாக்டர் சி.செல்வராஜ்:
மதுரை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போதே, ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. டாக்டராக பணிபுரியும் காலத்தில், 1992 ல்,பெரியகுளத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு கர்ப்பபை ஆப்பரேஷன் செய்தோம். ரத்தப்போக்கு அதிகளவில் இருந்தது. உடனடியாக ரத்தம் தேவைப்பட்டது. அந்த நேரத்தில், நான் ரத்தம் கொடுத்தேன். இது வரை 65 முறை ரத்ததானம் செய்துள்ளேன். 51 வது முறை ரத்ததானம் செய்யும் போது, தமிழக அரசு, தேனி மாவட்டத்தில் அதிக முறை ரத்ததானம் செய்த டாக்டர்களில் என்னை கவுரவப்படுத்தியது. தேனி மாவட்டத்தில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 5 ஆயிரம் பேர், குருதிக்கொடை உறுப்பினர்களாக உள்ளனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவோருக்கு,உதவ தயாராக உள்ளோம், தொடர்புக்கு- 98947- 31539.
எஸ்.அருணாசலம், போடி:
போடி பெரியாண்டவர் ஹைரோட்டில் ராம் புரோட்டா ஸ்டால் கடை நடத்தி வருகிறேன். "நான் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்து, ரத்ததானம் செய்து வருகிறேன். ஆண்டு தோறும் மூன்று முறைக்கு மேல் இது வரை 75 தடவைக்கு மேல் ரத்ததானம் செய்துள்ளேன். முகம் காண பல உயிர்களை காப்பாற்றியது எனக்கு ஆத்ம திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போன் செய்தாலே போதும், இருக்கும் இடம் தேடி ரத்ததானம் வழங்க.. 99766-83894.
கம்பம் ஆமோதி:
மத்திய அரசின் ஆடுகள் ஆராய்ச்சி நிலையத்தில், தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். விபத்தில் சிக்கிய ஒருவர், போதிய ரத்தம் கிடைக்காததால் இறந்ததை கண்டு மனம் வருந்தினேன். அதன் பின், விஜயகணேஷ் என்பவரின் விழிப்புணர்வில் ரத்ததானம் துவங்கினேன். அன்றிலிருந்து, ரத்ததானம் வழங்கும் பணியில் ஈடுபட்டேன். இதுவரை 52 முறை ரத்தம் வழங்கியுள்ளேன். 52 முறையும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தான் கொடுத்துள்ளேன். நானே முன் வந்து 3 மாதங்களுக்கு ஒருமுறை அங்கு சென்று ரத்தம் வழங்கி வந்தேன். ஆபத்தில் இருக்கும் எத்தனையோ உயிர்களுக்கு, நாம் வழங்கும் ரத்தம் உயிர் கொடுக்கும்... எனவே அனைவரும் ரத்ததானம் வேண்டும்.இவரை வாழ்த்த- 94864-59971.
நடராஜன், ஓய்வு ஆசிரியர், கூடலூர்:
பலமுறை ரத்த தானம் செய்து, 13 ஆண்டுகள் ரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்து வருகிறேன். ரத்தம் தேவைப்படுபவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு உதவி செய்து வருகிறேன்.உதவிக்கு 98425-49373.
சி.ஜெயசந்திரன், மருத்துவ அதிகாரி, ரத்தவங்கி, தேனி மருத்துவகல்லூரி மருத்துவமனை:
தேனி மாவட்டத்தில்,தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களில் அரசின் ரத்த வங்கி உள்ளது. நாங்கள் மாவட்டத்தில் உள்ள, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மொத்தமாக ரத்ததானம் பெற்று வருகிறோம். ஆண்டுதோறும் கல்லூரி விடுமுறை நாட்களான ஏப்ரல், மே மாதங்களில் தான் ரத்தம் தட்டுப்பாடு ஏற்படும்.எனவே, இந்த சமயங்களில் பொதுநல அமைப்புகள் ரத்ததானம் முகாம் நடத்தினால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தேனி மருத்துவ கல்லூரி மருத்தவமனையில் பயிலும் மருத்துவ மாணவர்கள், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்தான நேரத்தில் ரத்ததானம் செய்து வருகின்றனர்.தேனி மருத்துவகல்லூரியில், மாதம் தோறும் சாராசரியாக 500 யூனிட் ரத்தம் தானமாக பெறுகிறோம். தேவையும் அந்த அளவுக்கு உள்ளது. உங்களுக்கு அவசர சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்பட்டால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தேனி - 04546 - 294053. பெரியகுளம் அரசு மருத்துவமனை -04546-233745.
இது போக, தேனி ஆனந்தம் சில்க்ஸ், தேனி கணபதி சில்க்ஸ், சதுரகிரி மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களின் பணியாளர்கள், கம்மவார் கல்வி நிறுவனங்கள், உடையப்பா பொறியியல் கல்லூரி போன்ற கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும், தவ்ஹீத் ஜமாத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட பிற அமைப்பினரும், மிக்க ஆர்வமுடன் ரத்ததானம் செய்துவருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.