அணு, அனல், புனல் மின் நிலையங்களில் இருந்து, மின்சாரம் தயார் செய்வதற்கு மாற்றாக, கடல் காற்றிலிருந்து மின்சாரம் தயார் செய்யும்
ஆய்வுகள், ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி கடற்கரையில் நடந்து வருகின்றன.
எந்த காலங்களில் எல்லாம், கடல் காற்றின் வேகம் அதிகம் கிடைக்கும், மற்ற இடங்களில் காற்றாலை வைப்பதை விட, கடலில் வைப்பதால் எந்த வகையில் லாபம் என, பல ஆய்வுகளுக்காக, காற்று தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் சார்பில், தனுஷ்கோடியில், 100 மீட்டர் உயரத்தில், 'டவர்' அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக, கடல் காற்றில் இருந்து மின்சாரம் தயாரிப்பு என்ற, புதுமையான ஆராய்ச்சி இங்கு நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன், டவர் அமைக்கும் பணி துவங்கி, அக்., 1ம் தேதி முதல், காற்றின் வேகம் குறித்து, 'ரீடிங்' எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு, வினாடிக்கு, 10 மீட்டர் என்ற அளவில், காற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; மணிக்கு, 40 கி.மீ., வேகம். தொடர்ந்து இந்த ஆய்வுகள் ஓராண்டு நடத்தப்படும். காற்று தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்தின் செயல் இயக்குனர், கோமதிநாயகம் கூறியதாவது: கரைப்பகுதியில் காற்றாலை அமைப்பதை விட, கடலில் காற்றாலை வைப்பது, அதிக செலவை ஏற்படுத்தும். இப்போது, காற்று வீசும் சீசன் என்பதால், நல்ல நிலையில் காற்றின் அளவு உள்ளது. ஆண்டு முழுவதும் காற்று கிடைக்குமா என்பது, இந்த சோதனையில் தெரிந்து விடும். அதன் பின், கடலில் காற்றாலைகள் அமைப்பது குறித்து, முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.