காற்றாலை மின் உற்பத்தி ஒற்றை இலக்கமாக மாறியதால் தமிழகத்தின் பல
மாவட்டங்களில் அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு
அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி
இல்லாததால் கடுமையான மின்வெட்டு நிலவுகிறது. காற்று காலங்களில் மட்டும்
காற்றாலைகளின் உதவியால் மின்தடை
தற்காலிகமாக விலக்கி கொள்ளப்படுகிறது. புதிய மின் திட்டங்கள் பல முழுமை பெறாத நிலையில் காற்றாலைகள் காலைவாறும் போதெல்லாம் மின்வெட்டு விஸ்வரூபம் எடுக்கிறது. தற்போது வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கிவிட்டதால் கடந்த 10 தினங்களாக காற்றாலை மின் உற்பத்தி படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த 3 தினங்களாக காற்றாலைகள் முற்றிலும் இயங்காததால் வெறும் 4 மெகாவாட், 8 மெ.வா., 9 மெ.வா. என்ற ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே மின்சாரம் கிடைக்கிறது.
கடந்த 2 தினங்களாக இந்த நிலை நீடிப்பதால் சுமார் 2 ஆயிரம் மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி அனல் மின் நிலைய யூனிட்களில் தொடர்ந்து ஏற்படும் பழுது காரணமாகவும் மின் உற்பத்தி குறைகிறது. இதனால் சென்னை தவிர்த்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் 7 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. நேற்று மின் வெட்டு 9 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. முக்கிய நகரங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும் மீண்டும் மாலை தொடங்கி நள்ளிரவு வரை ஒரு மணி நேர இடைவெளியில் 3 முறையும் மின் வெட்டு நீடித்தது. இதேபோல் மற்ற இடங்களில் காலை முதல் மதியம் வரை இரண்டு ஷிப்டாக 6 மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரம் வீதம் 3 முறையும் மின் தடை செய்யப்பட்டது. இடைவிடாத மின் தடை காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். தொழிற் கூடங்களில் உற்பத்தி முடங்கியது. இதனால் அனைத்து தரப்பினரும் விரக்தி அடைந்துள்ளனர். கிராம மற்றும் நகரபகுதிகளில் இரவு மற்றும் நள்ளிரவிலும் ஒரு மணி நேரம் வீதம் தொடர்ச்சியாக மின் தடை செய்யப்படுகிறது. மின்விசிறி இயங்காததால் குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்கள் என பல தரப்பினரும் கொசுக்கடியால் தூக்கத்தை தொலைத்து அவதிப்படுகின்றனர்.