தலைமை ஆசிரியை தாமதமாக வருவதை கண்டித்து அரசு பள்ளிக்கூடத்துக்கு பொதுமக்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு

தலைமை ஆசிரியை தாமதமாக வருவதை கண்டித்து அரசு பள்ளிக்கூடத்துக்கு பொதுமக்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு
ஏற்பட்டது.

தலைமை ஆசிரியை தாமதம்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நம்பாக்கம் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 1–ம் வகுப்பில் இருந்து 5–ம் வகுப்பு வரை 50 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

தலைமை ஆசிரியையாக ஜோஸ்லின்மேரி, உதவி தலைமை ஆசிரியராக சசிகுமார் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். தலைமை ஆசிரியை ஜோஸ்லின்மேரி தினமும் பள்ளிக்கு காலதாமதமாக வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு கிராமமக்கள் பலமுறை புகார் மனு கொடுத்தும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

பள்ளிக்கூடத்துக்கு பூட்டு

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் தலைமை ஆசிரியை ஜோஸ்லின்மேரி பள்ளிக்கூடத்துக்கு தாமதமாக 10 மணிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பள்ளிக்கூடத்துக்கு பூட்டு போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உதவி தொடக்க கல்வி அலுவலர் வீரராகவன், நம்பாக்கம் கிராமத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

இடமாற்றம் செய்து உத்தரவு

பின்னர் பள்ளி தலைமை ஆசிரியை ஜோஸ்லின்மேரியை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் உதவி தலைமை ஆசிரியர் சசிகுமாரை தலைமை ஆசிரியராகவும் நியமித்து நடவடிக்கை எடுத்தார்.

இதை கிராம மக்கள் வரவேற்று மதியம் 12 மணியளவில் பள்ளிக்கூடத்துக்கு போட்ட பூட்டை திறந்து விட்டனர். பின்னர் மாணவர்கள் வகுப்பறைக்கு சென்று வழக்கம்போல் பாடங்கள் படித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...