தமிழ் நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலர் கே.அருள்
கூறியதாவது: கடந்த 23ம் தேதி நடந்த மெகா லோக் அதாலத்தில் நீதிமன்றத்துக்கு
வழக்கு
விசாரணைக்கு வராத 10 லட்சத்து 73,252 வழக்குகள் தீர்வுக்கு வந்துள்ளன.
இதன் மூலம் ரூ.600 கோடி பைசல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் 25 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பாகப் பிரிவினை வழக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப்பட்டது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் சொத்து தகராறு வழக்கு 1973ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. இந்த வழக்கும் இந்த லோக் அதாலத்தில் தீர்வுக்கு வந்தது.
ஒட்டுமொத்தமாக 13 லட்சத்து 77,252 வழக்குகள் தீர்வுக்கு கொண்டுவரப்பட்டு ரூ.1113 கோடியே 74 லட்சத்து 75,643 பைசல் செய்யப்பட்டது. நாட்டில் உள்ள பெரும்பாலான வழக்குகளை இது போன்ற மாற்றுமுறை தீர்வு மூலம் தீர்த்து வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த லோக் அதாலத்தில் தீர்வு எட்டப்படும் நேரத்தில் நீதிமன்றத்தில் அவர்கள் செலுத்திய முத்திரைத்தாள் தொகையை, அது கோடிக்கணக்கான ரூபாயாக இருந்தால்கூட திரும்பப் பெறலாம்.
நாடு முழுவதும் 16 ஆயிரம் நீதிமன்றங்களில் மெகா லோக் அதாலத் நடந்துள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 808 நீதிமன்றங்களில் மெகா லோக் அதாலத் நடந்துள்ளது. இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் வருமானவரி தொடர்பான ஒரு வழக்கு இந்த லோக் அதாலத்தில் தீர்க்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக வழக்குகளை முடித்து வைத்துள்ள பெருமையை தமிழகம் பெற்றிருக்கிறது.