பள்ளிகளில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் தமிழ் வாசிப்புதிறன்

தமிழகத்தில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாக, ஆய்வில் தெரிய
வந்துள்ளது.

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் நிலை குறித்து, எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின், தமிழ் வாசிப்புத் திறன், மிக மோசமாக உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதும், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, தமிழ் வாசிப்புத் திறன், 64 சதவீதமாக இருப்பதும், எஸ்.எஸ்.ஏ., மூலம், அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், நிரப்பப்படாமல் உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, மாவட்ட கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில், 'பள்ளிகள் இல்லாத, தொலை தூர குடியிருப்பு பகுதிகளில், புதிய பள்ளிகள் துவங்க, கருத்துரு அனுப்பவும், ஆசிரியரல்லாத பள்ளிகளில், உடனடியாக, ஆசிரியர்களை நியமிக்கவும், தமிழ்வாசிப்புத் திறனை அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...