பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை: பண்ருட்டியில் உறவினர்கள், பொதுமக்கள் சாலைமறியல்

பண்ருட்டியை அடுத்த வடக்கு பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் மாலதி (வயது 18). கள்ளக்குறிச்சியில் உள்ள பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார்.
நேற்று காலையில் மாலதி அந்த விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து
கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார், அந்த மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
மாலதி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அலறி துடித்தனர். மாலதியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பண்ருட்டியை அடுத்த அண்ணா கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கேட்டு கொண்டனர். ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நகர மறுத்துவிட்டனர்.
எனவே போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் மறியலில் பங்கேற்றவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதில் பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். சம்பவத்தின் போது போலீசார் மீது கல்வீச்சும் நடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கற்கள் மற்றும் அறுந்து கிடந்த செருப்புகளால் அந்த பகுதியே போர்களம் போல் காட்சியளித்தது.
சாலை மறியல் தொடர்பாக சுமார் 300 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறியல், கல்வீச்சு மற்றும் போலீஸ் தடியடியால் அண்ணாகிராமம் பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. எனவே அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...