கோவை அருகே தீத்திப்பாளையம் அரசுப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்
சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர்
ரகோத்தமன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அனுமதி பெறாமலும், பாதுகாப்பு இல்லாமலும் பள்ளி மாணவர்களை சரக்கு வாகனத்தில் சுற்றுலா அழைத்து சென்றதாக புகார் கூறியுள்ளனர். நேற்று சுற்றுலாவுக்கு சென்றுவிட்டு பள்ளிக்கு திரும்பிய போது சரக்கு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் தீத்திப்பாளையம் உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதா உயிரிழந்துள்ளார். மாணவி உயிரிழந்துள்ளதால் பள்ளிக்கு 2 நாள் விடுமுறை என்று மாவட்ட கல்வி அதிகாரி அறிவித்துள்ளார்.