டிசம்பர் 2 வரலாறு நிகழ்வுகள்


1755 - ஐக்கிய இராச்சியத்தின்
இரண்டாவது எடிஸ்டோன்
கலங்கரை விளக்கம் தீ விபத்தில்
அழிந்தது.
1804 - பாரிசில் நெப்போலியன்

பொனபார்ட் பிரான்சின் பேரரசனாக
முடிசூடினான்.
1805 - நெப்போலியனின்
தலைமையில் பிரெஞ்சுப் படைகள்
ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற
சமரில் ரஷ்ய -ஆஸ்திரியக் கூட்டுப்
படைகளைத் தோற்கடித்தனர்.
1843 - யாழ்ப்பாணத்தில் கடும்
சூறாவளி வீசியதில் பலத்த
அழிவுகள் ஏற்பட்டன.
1848 - முதலாம் பிரான்ஸ் ஜோசப்
என்பவன் ஆஸ்திரியாவின் பேரரசன்
ஆனான்.
1851 - புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரெஞ்சு தலைவன் சார்ல்ஸ்
லூயி பொனபார்ட் இரண்டாம்
குடியரசைக் கலைத்தான்.
1852 - மூன்றாம் நெப்போலியன்
பிரான்சின் பேரரசன் ஆனான்.
1908 - பூ யி
தனது இரண்டாவது அகவையில்
சீனாவின் பேரரசனாக
முடிசூடினான்.
1942 - மன்காட்டன் திட்டம் :
என்றிக்கோ பெர்மி தலைமையிலான
குழு செயற்கையாகத்
தானே தொடருமாறு நிகழும்
அணுக்கரு தொடர்வினையை
ஆரம்பித்தது.
1946 - பிரித்தானிய அரசாங்கம் நேரு
, பால்தேவ் சிங், ஜின்னா , மற்றும்
லியாகத் அலி கான் ஆகிய
தலைவர்களை இந்தியாவின் சட்ட
சபையைப் பிரதிநிதித்துவப்படுத்த
அழைத்தது.
1947 - பாலஸ்தீன நாட்டைப் பிரிக்க
ஐநா சபை எடுத்த
முடிவை அடுத்து ஜெருசலேமில்
கலவரம் வெடித்தது.
1954 - சீனாவுக்கும் ஐக்கிய
அமெரிக்காவுக்கும் இடையில்
பாதுகாப்பு ஒப்பத்தம் வாஷிங்டன்
டிசியில் கைச்சாத்திடப்பட்டது.
1956 - பிடல் காஸ்ட்ரோ,
சே குவேரா மற்றும்
ஆதரவாளர்களும்
கியூபா புரட்சியை
முன்னெடுப்பதற்காக கிரான்மா என்ற
படகில் கியூபாவை சென்றடைந்தனர்.
1961 - பிடெல் காஸ்ட்ரோ
தன்னை ஒரு மார்க்சிச -
லெனினிசவாதி எனவும் கியூபா
கம்யூனிச நாடாக இருக்கும் எனவும்
அறிவித்தார்.
1971 - அபுதாபி , புஜெய்ரா ,
ஷார்ஜா , துபாய் மற்றும் உம் அல்
குவைத் ஆகியன இணைக்கப்பட்டு
ஐக்கிய அரபு அமீரகம் என்ற
ஒரே நாடாக ஆக்கப்பட்டது.
1971 - ஐக்கிய இராச்சியத்திடம்
இருந்து ஐக்கிய அரபு அமீரகம்
விடுதலை பெற்றது.
1975 - பத்தே லாவோ என்பவர்
லாவோசின் ஆட்சியைப் பிடித்து
லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசை
அமைத்தார்.
1976 - பிடெல் காஸ்ட்ரோ
கியூபாவின் அரசுத் தலைவரானார்.
1980 - எல் சல்வடோரில் நான்கு
ஐக்கிய அமெரிக்க கன்னியாஸ்திரிகள்
சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
1988 - பெனாசீர் பூட்டோ
பாகிஸ்தானின் முதல் பெண்
பிரதமரானார்.
1990 - ஒன்றுபட்ட ஜேர்மனியில் 1932
ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற
முதலாவது பொதுத்தேர்தலில் அதன்
வேந்தர் ஹெல்முட் கோல்
தலைமையிலாண
கூட்டணி வெற்றி பெற்றது.
1993 - ஹபிள் விண்வெளித்
தொலைநோக்கியைத் திருத்தும்
நோக்கோடு நாசாவின் எண்டெவர்
விண்ணோடம்
விண்ணுக்கு ஏவப்பட்டது.
1995 - யாழ்ப்பாணக் குடாநாடு
இலங்கை இராணுவத்திடம்
வீழ்ச்சி அடைந்தது.
2002 - இலங்கை அரசுக்கும்
விடுதலைப் புலிகளுக்கும்
இடையில் பேச்சுவார்த்தைகள்
ஒஸ்லோவில் ஆரம்பமாயின.
2005 - போதைப்பொருள் கடத்தல்
குற்றத்துக்காக ஆஸ்திரேலியரான
வான் துவோங் நியூவென்
சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்.
2006 - பரிதிமாற் கலைஞரின்
நூல்கள் தமிழக அரசினால்
நாட்டுடமை ஆக்கப்பட்டன.
2006 - பீகார் மாநிலத்தின்
பகல்பூரில் பாலம் இடிந்து வீழ்ந்ததில்
அதன் வழியாகச் சென்ற கடுகதித்
ரயில் விபத்துக்குள்ளாகியதில் 35
பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்
1910 - ரா. வெங்கட்ராமன் ,
இந்தியாவின் 8வது குடியரசுத்
தலைவர்
1933 - கி. வீரமணி , திராவிடர் கழகத்
தலைவர்.
1979 - அப்துல் ரசாக், பாகிஸ்தான்
முன்னாள் கிரிக்கெட் வீரர்
1982 - முருகதாசன் , தீக்குளித்து
இறந்த ஈழத்தமிழன் (இ. 2009 )
1981 - பிரிட்னி ஸ்பியர்ஸ், பாப்
இசைப் பாடகர் (பாடகி)
1973 - மோனிகா செலஸ், டென்னிஸ்
வீராங்கனை.
1973 - யான் உல்ரிச், ஜெர்மானிய
சைக்கிள் வீரர்.

இறப்புகள்
1547 - எர்னான் கோட்டெஸ்,
நாடுபிடிப்பாளர் (பி. 1485)
1552 - புனித பிரான்சிஸ் சேவியர்,
ரோமன் கத்தோலிக்க மிஷனறி (பி.
1506 )
1911 - பாண்டித்துரைத் தேவர்,
தமிழறிஞர் (பி. 1867)
1933 - ஜி. கிட்டப்பா , நாடக நடிகர்
2006 - வீ. துருவசங்கரி,
இலங்கையின் அறிவியலாளர் (பி. 1950 )
2008 - மு. கு. ஜகந்நாதராஜா ,
பன்மொழிப் புலவர் (பி. 1933 )

சிறப்பு நாள்
லாவோஸ் - தேசிய நாள்
ஐக்கிய அரபு அமீரகம் - தேசிய நாள்
( 1971 )
ஐக்கிய நாடுகள் - அடிமைத்தனத்தை
அழிக்கும் சர்வதேச நாள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...