நடப்பாண்டு ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள், பணி ஓய்வு பெறுகின்றனர். மாநிலம் முழுவதும் அரசுத்துறைகளில் 3 லட்சம் காலிப்பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும் என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க
மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தோம். தற்போது, அரசு சார்பில் ஒரு லட்சத்து 87 ஆயிரம் காலி பணியிடங்கள் இருப்பதாக கூறியுள்ளது. ஆனால், அதை விட கூடுதல் காலி பணியிடங்கள் உள்ளது. நடப்பாண்டு ஒன்றரை லட்சம் பேர், பணி ஓய்வு பெறுவதையொட்டி, மாநிலம் முழுவதும் 3 லட்சம் காலி பணியிடங்கள் அரசு துறைகளில் ஏற்பட்டுள்ளது. பணிப்பளு மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள், மக்களுக்கு சென்றவடைதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப, பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களில், இவர்களை நியமிக்க வேண்டும். பல துறைகளில், ஊதிய முரண்பாடு தொடர்பாக முறையிட்டுள்ளோம். அரசு பாரபட்சமாக, நீதித்துறைக்கு மட்டும், புதிய அரசாணையை, நவ.8ல், வெளியிட்டது. தமிழகம் முழுவதும் பசுமை வீடுகள், தலா 300 சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. நகரமைப்பு சட்டத்தில் 1200 சதுர அடி இருந்தால் மட்டுமே, மனைக்கான அங்கீகாரம் வழங்கப்படும் என, அரசு விதி உள்ளது. இதனால், ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 300 சதுர அடி இருந்தால் போதும். மனைக்கான அங்கீகாரம் வழங்கப்படும் என, நகரமைப்பு சட்டத்தை மாற்றியமைக்க, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், என்றார்.