1259 - பிரான்சின் ஒன்பதாம் லூயி இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றியும் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் படி நோர்மண்டி உட்பட
ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு ஹென்றி உரிமை கொண்டாடுவதில்லை எனவும் ஆங்கில புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது. 1639 - ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை கண்டுபிடித்தார். 1791 - உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி ஒப்சேர்வரின் முதலாவது இதழ் வெளிவந்தது. 1829 - ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் சதி முறையை ஒழிக்க ஆளுநர் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1918 - முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய அமெரிக்க அதிபர் வூட்ரோ வில்சன் பிரான்ஸ் சென்றார். பதவியில் உள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் ஐரோப்பா சென்றது இதுவே முதற் தடவையாகும். 1943 - இரண்டாம் உலகப் போர் : யூகொஸ்லாவியாவின் எதிப்புத் தலைவர் மார்ஷல் டீட்டோ "ஜனநாயக யூகொஸ்லாவிய அரசாங்கம்" ஒன்றை தற்காலிகமாக அமைத்தார். 1945 - ஐக்கிய அமெரிக்கா ஐநாவில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து செனட் அவை வாக்களித்தது. 1952 - லண்டனை குளிர் மேக மூட்டம் சூழ்ந்தமையால் காற்று மாசடைந்தமையால் அடுத்தடுத்த வாரங்களில் மட்டும் 12,000 பேர் கொல்லப்பட்டனர். 1957 - ஐக்கிய இராச்சியத்தில் லூவிஷாம் என்னுமிடத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 92 பேர் கொல்லப்பட்டனர். 1958 - பிரெஞ்சு அதிகாரத்தின் கீழ் டொஹெமி சுயாட்சி உரிமை பெற்றது. 1959 - ஐக்கிய அமெரிக்காவின் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் பூமி திரும்பியது. 1967 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா , மற்றும் தெற்கு வியட்நாம் படைகள் மேக்கொங் டெல்ட்டா பகுதியில் வியட் கொங் படைகளுடன் மோதினர். 1971 - இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய ஐநா பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது. 1971 - பாகிஸ்தானின் கடற்படையினரையும் கராச்சி நகரையும் இந்தியக் கடற்படையினர் தாக்கினர். 1976 - ஆச்சே விடுதலை இயக்கம் அமைக்கப்பட்டது. 1977 - மலேசியாவின் விமானம் ஒன்று கடத்தப்பட்டு ஜொகூர் என்ற இடத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் கொல்லப்பட்டனர். 1984 - குவைத் விமானம் ஒன்றை ஹெஸ்புல்லா அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர். 1991 - டெரி அண்டர்சன் என்ற அமெரிக்க ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பெய்ரூட்டில் விடுவிக்கப்பட்டார். 1991 - ஐக்கிய அமெரிக்காவின் பான் ஆம் விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது. 1992 - ஐக்கிய அமெரிக்கா சோமாலியாவுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பியது. 2005 - ஹொங்கொங்கில் பல்லாயிரக்கணக்கானோர் ஜனநாயகம் வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2006 - பிரான்ஸ் தொண்டு நிறுவனத்தின் பதினேழு தமிழ் ஊழியர்கள் இலங்கை , கிழக்கு மாகாணத்தின் மூதூரில் படுகொலை செய்யப்பட்டனர். பிறப்புக்கள் 1919 - ஐ. கே. குஜரால் , 15வது இந்தியப் பிரதமர் 1969 - ஜெய்-சி , அமெரிக்காவின் ராப் இசைக் கலைஞர் 1977 - அஜித் அகர்கர், இந்தியத் கிரிக்கெட் வீரர். இறப்புகள் 1122 - ஓமர் கய்யாம் , பாரசீகக் கவிஞர் (பி. 1048) 1976 - ந. பிச்சமூர்த்தி , தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர் (பி. 1900 ) சிறப்பு நாள் இந்தியா - கடற்படையினர் தினம்.