6 முதல் 8ம் வகுப்பு வரை உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு.

பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட்1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின்
அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும்,கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி அளவை பதிவேடை (ஸ்கேல் ரெஜிஸ்டர்) பார்வையிட்டு பணியிடங்களின் எண்ணிக்கையை துல்லியமாக சரிபார்த்து கடந்த ஆகஸ்ட்1ம் தேதி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும். குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி6முதல்8ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியிடம்1:35என்ற விகிதாச்சார அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.பாடவாரியான உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்திட ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளபடி 9, 10ம் வகுப்புகளுக்கு ஆசிரியர் & மாணவர் விகிதாச்சாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதில் ஆர்எம்எஸ்ஏ விதிகளின்படி 160 மாணவர்களுக்கு 5 பணியிடங்கள், கூடுதல் 30மாணவர்களுக்கு 1பணியிடம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும்,ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணி பங்கீட்டை விரிவாக ஆய்வு செய்து பாட வேளைகள் உரிய விதிகளின்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைஉறுதி செய்ய வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...