'அரசு பஸ்களில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளின் சக்கர நாற்காலிக்கு,
சுமை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது' என, போக்குவரத்து துறை அதிகாரிகள்
உறுதி அளித்தும், சுமை கட்டணம் வசூலிப்பதை, நடத்துனர்கள் கட்டாயமாக்கி
வருவதால், மாற்றுத்திறனாளிகள் பரிதவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும், 22 லட்சத்திற்கும் மேற்பட்ட, மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்கள், அரசு பஸ்களில், 75 சதவீத சலுகை கட்டணத்துடன் செல்ல வசதியுள்ளது. இருப்பினும், பயணத்தின்போது, மாற்றுத்
திறனாளிகள், பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகின்றன.
மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆகியோர், கடந்த, 3ம் தேதி, தலைமை செயலகத்தில் கலந்து ஆலோசித்தனர்.அப்போது, மாற்றுத் திறனாளிகள், பஸ்களில் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் சலுகைகள் மறுக்கப்படுவதும் குறித்து, பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, மாற்றுத் திறனாளிகள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.
குறிப்பாக, பயணத்தின் போது மாற்றுத் திறனாளிகள் எடுத்துச் செல்லும் சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கையை, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஏற்றனர். இந்நிலையில், மீண்டும் அரசு பஸ்களில் சக்கர நாற்காலிகளுக்கு சுமை கட்டணம் வசூலிப்பதால், மாற்றுத் திறனாளிகள், சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், மாநிலச் செயலர், நம்புராஜன் கூறியதாவது:அரசு பஸ்களில், மாற்றுத் திறனாளிகளின் சக்கர நாற்காலிக்கு, முழு கட்டணம் வசூலிக்கின்றனர். சலுகை கட்டணத்தில் மாற்றுத் திறனாளி செல்ல, அரசு வசதி செய்துள்ள நிலையில், சக்கர நாற்காலிக்கு, முழு கட்டணம் வசூலிப்பதன் மூலம், ஒன்றேகால் மடங்கு பயணக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு, மாற்றுத் திறனாளிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
'சுமை கட்டணம் வசூலிக்கக் கூடாது' என, நடத்துனர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் கூறினர். ஆனால், கடந்த, 21ம் தேதி, திருப்பூரைச் சேர்ந்த இரண்டு கால்களும் செயலிழந்த மாணிக்கம், அரசு பஸ்சில் பயணித்த போது, சக்கர நாற்காலிக்கு கட்டணம் வசூலித்துள்ளனர்; மற்றொரு அரசு பஸ்சில், அவரை ஏற்றிச் செல்ல மறுத்துள்ளனர்.இதனால், நல்லாசிரியர் விருது பெற்று, ஓய்வு பெற்ற மாணிக்கம் சிரமப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை செயலர் அளித்த உறுதிமொழிக்கு மாறாக, இது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.இனியாவது, போக்குவரத்து ஊழியர்களுக்கு உரிய பயிற்சியையும், உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் போராட்டம் நடத்துவதைத் தவிர, வேறு வழியில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டம்:

அதிகாரிகள் சம்மதம்:

ஏற்றிச் செல்ல மறுப்பு: