அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு மாணவர்களிடம் கேள்வி

கும்மிடிப்பூண்டி கோட்டகரை நேதாஜி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் நேரில் சென்றார். அங்கு 1-ஆம் வகுப்பில் இருந்து 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் 104 மாணவர்களின் கல்வித்தரத்தையும் அவர் ஆய்வு செய்தார். புத்தகங்களை வாசிக்க
சொல்லி மாணவர்களிடம் கேள்வி கேட்டார்.

பள்ளி வளாகம் தூய்மையாக இல்லாதததை கண்டும், மாணவர்களின் கல்வித்தரம் போதுமான அளவில் திருப்திகரமாக இல்லை என்பது குறித்தும் மாவட்ட கலெக்டர் விரராகவராவ் பள்ளி தலைமையாசிரியர் நவநீதத்திடம் விசாரணை நடத்தினார்.

மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த பழைய கட்டிடத்தை இடிக்கவும், மாணவர்களுக்கு உரிய கழிப்பறை கட்டவும் உரிய நடவடிக்கை எடுக்க உடன் வந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மாவட்ட கலெக்டரின் இந்த திடீர் ஆய்வின்போது கும்மிடிப்பூண்டி தாசில்தார் அப்துல்ரகீம், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...