சென்னையில், பழைய மத்திய சிறைச்சாலை இடத்தில் கட்டப்பட்டுள்ள, சென்னை மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வந்தது. எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு
மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று துவங்கின. மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்புகளுக்குச் சென்றனர்.
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே, மத்தியச் சிறைச்சாலை செயல்பட்டு வந்தது. மத்திய சிறை, புழலுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, பழைய சிறைச்சாலை இடம், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு, அரசு வழங்கியது. கடந்த, 2009ல், சிறைச்சாலைக் கட்டடம் இடிக்கப்பட்டது. இந்த இடத்தில், 60 கோடி ரூபாயில், தரைத்தளம் மற்றும், ஆறு அடுக்கு மாடி கொண்ட, புதிய மருத்துவக் கல்லூரி கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை, முதல்வர் ஜெயலலிதா, மார்ச், 1ம் தேதி திறந்து வைத்தார். ஆனால், ஒன்பது மாதங்கள் ஆகியும், பயன்பாட்டுக்கு வரவில்லை. 'வகுப்புகள் துவங்க, தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது; பணிகள் முடிவடைந்ததும் திறக்கப்படும்' என, மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், புதிய மருத்துவக் கல்லூரி கட்டடம் நேற்று பயன்பாட்டுக்கு வந்தது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கியதால், 250 மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் இருந்தனர். பிரமாண்ட புதிய கட்டடம் முன் நின்று, புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், கல்லூரி டீன் கனகசபை, புதிய வகுப்புக்களை பார்வையிட்டு, மாணவர்களிடம் பேசினர். 'புதிய கட்டடத்தில் நிறைய வசதிகள் உள்ளன. இதை பயன்படுத்தி நன்கு படிக்க வேண்டும். டாக்டர்களாகி, ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும். குறிப்பாக, கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்ற வேண்டும்' என, கேட்டுக் கொண்டனர். 'கட்டடத்தில், தேவைக்கேற்ப உள்கட்டமைப்பு வேலைகள் இன்னும் செய்யப்படவில்லை. பணிகள் முடிந்ததும், படிப்படியாக, எல்லா பிரிவுகளும் செயல்படத் துவங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கட்டடத்தையொட்டி, 20 கோடி ரூபாயில், மருத்துவ மாணவியருக்கான விடுதி ஒன்றும் கட்டப்பட உள்ளது.