பூமியில் மிகக் குறைந்த வெப்பநிலை அண்டார்ட்டிக்காவில் பதிவு செய்யப் பட்டது.

பூமியில் மனித நாகரிகம் தொடங்கியதில் இருந்து வரலாற்றிலேயே மிகக் குறைவான வெப்பநிலை அண்டார்ட்டிக்காவில் இவ்வருடம் ஜுலையில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது 0 பாகைக்கு 135.8 F அல்லது 93.2 C டிகிரி குறைவாக இந்த

வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிதனின் சுவாசத்தை முற்றாகப் பாதிக்கக் கூடியது இந்த உறைநிலை என்றும் கூறப்படுகின்றது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் ரிமோட் சென்சிங் செய்மதியால் இப்பதிவு மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதற்கு முன்னைய பதிவாக 1983 ஆம் ஆண்டு அண்டார்ட்டிக்காவின் வொஸ்டொக்கில் வெப்பமானி (thermometer) மூலம் அளக்கப் பட்டிருந்தது. இதன் அளவு 0 பாகைக்கு 128.6 F டிகிரிக்கள் குறைவாகும். - 100 டிகிரி உறை நிலையில் மனிதனால் அதிக பட்சம் 3 நிமிடங்களே உயிர் வாழ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியில் மிகக் குறைவான வெப்பநிலை இதுவென அறிவிக்கப் பட்டுள்ள போதும் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலோ அல்லது WMO எனப்படும் உலக பௌதிக அளவீட்டுத் திணைக்களத்தாலோ உலக சாதனையாக இந்தத் தரவு ஏற்கப்படவில்லை. இதற்குக் காரணம் இந்த மிகக் கூடிய குளிர் நிலை செய்மதிகளால் அளக்கப் பட்டுள்ளமை என்றும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை திங்கட்கிழமை அமெரிக்காவில் மிகக் குறைந்த வெப்பநிலையாக - 27 டிகிரிக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...