மனித ஸ்டெம் செல்களைக்
கொண்டு இதுநாள்வரை இதய செல்கள்,
கணைய பீட்டா செல்கள், குடல் செல்கள்,
கல்லீரல் செல்கள், நரம்பு செல்கள்
போன்றவை உருவாக்கப்பட்டுள்ளதுடன்,
மறுவளர்ச்சி மருத்துவத்தில்
சாத்தியமான
அனைத்து வகைகளையும்
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தற்போது அமெரிக்காவின்
கொலம்பியா மருத்துவ மையத்தின்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
ஆராய்ச்சியாளர்கள் மனித
ஸ்டெம்செல்களைக்
கொண்டு முதன்முறையாக
செயல்பாட்டு நுரையீரல் மற்றும்
சுவாச செல்களை உருவாக்கியுள்ளனர்.
இந்த முன்னேற்றம் நுரையீரல் நோய்
குறித்த
மாதிரிகளை ஆய்வு செய்வதிலும்,
மருந்துகளைப் பரிசோதிப்பதிலும்,
மனித நுரையீரல் வளர்ச்சிகளைப்
பற்றி அறிவதிலும், மாற்று நுரையீரல்
திசு உருவாக்குவதிலும்
முக்கியத்துவம் பெறும் சாத்தியம்
உள்ளது.
நுரையீரல்
மாற்று அறுவை சிகிச்சை என்பது பெரிய
முன்னேற்றத்தை இதுநாள்வரை கொண்டிருக்கவில்லை.
எனவே, தற்போதைய
கண்டுபிடிப்பு இந்த சிகிச்சையில்
முன்னேற்றத்தை ஏற்படுத்தும்
என்று இம்மருத்துவமனையின் நோய்த்
தடுப்பியல் மற்றும் ஸ்டெம்செல்
ஆய்வியல் மைய பேராசிரியர்
ஸ்னோயெக் தெரிவித்துள்ளார்.
இவற்றை முறையாகப் பயன்பாட்டிற்குக்
கொண்டுவர பல வருடங்கள் ஆகும்
என்றபோதிலும்,
ஒரு நோயாளிக்கு அவரது தோலைப்
பயன்படுத்துவதன் மூலம் நுரையீரல்
மாற்று சிகிச்சை அளிப்பது குறித்து நாம்
யோசிக்கத் தொடங்கமுடியும் என்றும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொண்டு இதுநாள்வரை இதய செல்கள்,
கணைய பீட்டா செல்கள், குடல் செல்கள்,
கல்லீரல் செல்கள், நரம்பு செல்கள்
போன்றவை உருவாக்கப்பட்டுள்ளதுடன்,
மறுவளர்ச்சி மருத்துவத்தில்
சாத்தியமான
அனைத்து வகைகளையும்
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தற்போது அமெரிக்காவின்
கொலம்பியா மருத்துவ மையத்தின்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
ஆராய்ச்சியாளர்கள் மனித
ஸ்டெம்செல்களைக்
கொண்டு முதன்முறையாக
செயல்பாட்டு நுரையீரல் மற்றும்
சுவாச செல்களை உருவாக்கியுள்ளனர்.
இந்த முன்னேற்றம் நுரையீரல் நோய்
குறித்த
மாதிரிகளை ஆய்வு செய்வதிலும்,
மருந்துகளைப் பரிசோதிப்பதிலும்,
மனித நுரையீரல் வளர்ச்சிகளைப்
பற்றி அறிவதிலும், மாற்று நுரையீரல்
திசு உருவாக்குவதிலும்
முக்கியத்துவம் பெறும் சாத்தியம்
உள்ளது.
நுரையீரல்
மாற்று அறுவை சிகிச்சை என்பது பெரிய
முன்னேற்றத்தை இதுநாள்வரை கொண்டிருக்கவில்லை.
எனவே, தற்போதைய
கண்டுபிடிப்பு இந்த சிகிச்சையில்
முன்னேற்றத்தை ஏற்படுத்தும்
என்று இம்மருத்துவமனையின் நோய்த்
தடுப்பியல் மற்றும் ஸ்டெம்செல்
ஆய்வியல் மைய பேராசிரியர்
ஸ்னோயெக் தெரிவித்துள்ளார்.
இவற்றை முறையாகப் பயன்பாட்டிற்குக்
கொண்டுவர பல வருடங்கள் ஆகும்
என்றபோதிலும்,
ஒரு நோயாளிக்கு அவரது தோலைப்
பயன்படுத்துவதன் மூலம் நுரையீரல்
மாற்று சிகிச்சை அளிப்பது குறித்து நாம்
யோசிக்கத் தொடங்கமுடியும் என்றும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
