ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்

வாத்தியார்கள் மாணவர்களை அடித்த காலம் போய், இப்போது மாணவர்கள் ஆசிரியர்களை அடித்து துவம்சம் செய்கிற காலமாகிவிட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இயங்கிவரும் கண்ணம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் அதற்கு உதாரணம். இங்கு ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்கள் இருவர், அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் சுப்பிரமணியத்தை
வகுப்பறையில் வைத்தே புரட்டி எடுத்துள்ளனர். தாடை எலும்பு முறிந்து, முன்பற்கள் இரண்டு உடைந்து, காது சவ்வு கிழிந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த சுப்பிரமணியத்திடம் பேசியனோம், ''சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம்தான் எனக்கு சொந்த ஊரு. எம்.காம்., பி.எட். படிச்சிருக்கேன். கடந்த மூணு வருஷமா பல்லடத்தில் இருக்கிற இந்தப் பள்ளியில வணிகவியல் ஆசிரியரா வேலைபார்த்து வர்றேன். டிசம்பர் 2-ம் தேதி அன்னிக்கு மதியம் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கிட்டு இருந்தேன். எல்லா மாணவர்களும் சரியான நேரத்துக்கு வகுப்புக்கு வந்து பாடத்தைக் கவனிச்சாங்க. அந்த ரெண்டு பேரும் லேட்டா வகுப்புக்கு வந்தாங்க. அதை நான் கண்டிச்சேன். உடனே கோபப்பட்ட ரெண்டு பேரும் அவங்க கையில் வெச்சிருந்த பரீட்சை அட்டையாலும், கைகளாலும் மாறி மாறி என் முகத்துல தாக்கினாங்க. இதில் பலத்த அடிப்பட்டு முகத்தில் ரத்தம் வழிய மயக்கம்போட்டு விழுந்திட்டேன். அப்புறமா மத்த ஆசிரியருங்கதான் என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்து சேர்த்தாங்க. தாடை எலும்பு, காது சவ்வு, முன்பற்கள் எல்லாம் பலத்த அடிபட்டிருக்கு.. குருவா மதிக்க வேண்டிய ஆசிரியர்களுக்கே பாதுகாப்பு இல்லாம போச்சுங்க'' என்று கண்கள் கலங்கினார் சுப்பிரமணியம். கணவரின் கண்களைத் துடைத்தபடி பேசினார் அவரின் மனைவி கோகிலா. ''இவருக்கு இந்தப் பள்ளிக்கூடத்துல நல்ல பேரு. சின்சியரா பாடம் நடத்தியதால், போன வருஷம் நல்ல ரிசல்ட் கிடைச்சது. அதனால இவருக்கு புரமோஷனும்கூட கொடுத்தாங்க. அப்படிப்பட்ட நல்ல ஆசிரியருக்கு இதுதான் தண்டனையா? பள்ளிக்கூட நிர்வாகம் மாணவர்கள் மேல காட்டும் அக்கறையை, ஆசிரியர்கள் மீது துளியும் காட்டுவது இல்லை. 'நாங்க கொடுக்கிற ஃபீஸுலதானே நீ சம்பளம் வாங்குற... அப்புறம் எதுக்கு எங்களைக் கேள்வி கேட்குற?’ன்னு சொல்லி அடிசிருக்காங்க. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்தான் இங்கு நிலவுது. என்னதான் தப்பு செஞ்சாலும் மாணவர்களுக்கு சப்போட்டாத்தான் பள்ளி நிர்வாகத்துல இருக்காங்க. இந்த வியாபாரத்துக்கு அவங்கதானே மூலதனம்'' என்றார் காட்டமாக. பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ், ''ஆசிரியர் சுப்பிரமணியத்தைத் தாக்கியது, ஆபாசமாகத் திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய மூன்று பிரிவுகளில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறோம். அவர்களை கைது செய்யவில்லை'' என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...