தேர்வு பணியில் நடுநிலை பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க திட்டம்

பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுப் பணியில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி, முதுகலை ஆசிரியர் மட்டும்
ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர் சேர்க்கப்படுவதில்லை. இந்த நிலையை மாற்றி, இரு துறைகளிலும் உள்ள பட்டதாரி ஆசிரியருக்கும், தேர்வுப்பணி வழங்க வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், வரும் பொது தேர்வில், நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரையும், தேர்வுப் பணியில் ஈடுபடுத்த, தேர்வுத் துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...