பள்ளியில் சேராமல் தெருவோரங்களில் திரியும் குழந்தைகள் எதிர்காலத்தில் குற்றவாளிகளாகும் வாய்ப்பு அதிகம்: ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் பேச்சு

பள்ளிகளில் சேர்க்கப்படாமல் தெருவோரங்களில் விளையாட அனுமதிக்கப்படும் குழந்தைகள்தான் எதிர்காலத்தில் குற்றவாளிகளாக மாறும் வாய்ப்பை அதிகம் பெற்றுள்ளனர் என்று சென்னை ஐகோர்ட்டு
நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் கூறினார்.
பயிற்சி நிறைவு
சென்னையில் சட்டக்கல்வி மாணவர்களுக்கு,
கட்டாய கொத்தடிமை நிலை குறித்த இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெற்றது. அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகமும், சர்வதேச நீதிக்கழகமும் இணைந்து நடத்திய இந்த பயிற்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது.இந்த விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் ஆற்றிய உரை வருமாறு:–
அமலாகாத சட்டங்கள்
ஐகோர்ட்டு மதுரை கிளையில் பணியாற்றும்போது கொத்தடிமையான குழந்தைகள், பெரியவர்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரித்திருக்கிறேன். அவர்களாகவே முன்வந்து, குடும்பத்துக்காக கடனாக ஒரு தொகையைப் பெற்று, பீடிக்கம்பெனி, முருக்குக் கம்பெனிக்கு கொத்தடிமைகளாகி விடுகின்றனர்.இந்தியாவின் பொருளாதார நிலையை இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த நிலையை ஒழிப்பதற்கு சட்டங்கள் இருந்தாலும், அவை முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா? என்பது இன்னும் கேள்வியாக உள்ளது.
திருடர்களாகும் வாய்ப்பு
சென்னையில் பல இடங்களில் தெருவிலும், சாலை ஓரங்களிலும் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை இன்றும் பார்க்கலாம். ஏன் அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை? எதிர்காலத்தில் திருட்டுகள், பிக்பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடும் வாய்ப்பு இந்த சிறுவர்களுக்கு அதிகம் உள்ளது.ஏன் அந்தக் குழந்தைகளின் நிலை இப்படி உள்ளது? என்பதை அவர்களின் பெற்றோரிடம் கேட்க வேண்டும். இலவச கட்டாயக் கல்விச்சட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதன்படி, ஒன்று முதல் 8–ம் வகுப்புவரை குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி புகட்டவேண்டும். பள்ளிகளில் ஏழைக்குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடும் தரப்பட்டுள்ளது.
பகுதி நேர சேவை
அப்படி இருந்தும் ஏன் தெருவோரங்களில் குழந்தைகளை நாம் காண முடிகிறது? இதை சட்ட மாணவர்கள் சிந்திக்க வேண்டும். பெற்றோருக்கு முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அந்த மக்களின் தற்போதைய நிலை வருத்தத்தை அளிக்கிறது.உங்கள் வீட்டில் உள்ள டிரைவர், வேலையாட்களின் குழந்தைகள் படிக்கிறதா? என்பதை விசாரியுங்கள். படிக்காவிட்டால் பள்ளியில் சேர்த்துவிடுங்கள். இதை நீங்கள் செய்யாவிட்டால், வேறு யாரும் செய்ய முன்வரமாட்டார்கள். பணியிலோ, தொழிலிலோ இருந்தாலும், பகுதி நேரப்பணியாக இதை அர்ப்பணிப்புடன் செய்யுங்கள்.
தானாக சீரடையாது
எத்தனையோ சட்டங்கள் இருந்தாலும், அதை அமலாக்குகிறவர்கள் சரிவர செயல்படுவதில்லை. ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்துவது பற்றி பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துகிறோம் என்று அரசுத் தரப்பு பதிலளிக்கிறது. அதை ஏற்று வழக்கும் முடித்து வைக்கப்படுகிறது. ஆனால், உண்மை நிலவரம் நமக்கு எல்லாருக்கும் தெரியும்.சமுதாயம் தானாக சீரடையாது. நாம்தான் அதை சீரடையச் செய்ய வேண்டும். நீங்கள் செய்யாவிட்டால், வேறு யார்தான் அந்தப் பணியை கையில் எடுப்பார்கள்?இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்தின் முதுநிலை கல்வியின் முதல்வர் ரகுநாத ரெட்டி, சர்வதேச நீதிக்கழகத்தின் இயக்குனர் கிரிபித், பயிற்சித் திட்ட இயக்குனர் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...