நம் அனைவருக்கும் ஓரே "தாய்" நட்சத்திரம்.

ஜாதி , மத, மொழி , நாடு என்ற
பேதமின்றி , இந்த பூமியில் உள்ள
அனைத்து மனிதர்களும் ஒரு தாய்
மக்களே . அந்தத் தாய்
யாரென்று அறிந்தால் மிகவும்

ஆச்சரியமும் , பெருமையும்
கொள்வீர்கள் . அந்தத் தாய் ' நட்சத்திரம் '
தான் .

நம்மில் பலர் நட்சத்திரம் ( ஸ்டார்) ஆக
வேண்டும்
என்று கனவு கண்டிருப்பார்கள் .
அவர்களுக்கு , தாங்கள் நட்சத்திரத்தின்
குழந்தைகள்தான் என்ற
செய்தி பெருமையாகத்தானே இருக்கும்.
நாம் அனைவரும்
எப்படி நட்சத்திரத்திலிருந்து வந்தோம்?

உயிர்கள் உருவாக பல தனிமங்கள்
தேவை . மனிதர்களாகிய நமக்கு ரத்தம்
சுத்தமாவதற்கு வேண்டிய
ஆக்சிஜன் , எலும்பின் உறுதிக்குத்
தேவையான கால்சியம் ,
ரத்தத்திற்கு வேண்டிய இரும்புச்
சத்து , மற்றும் கார்பன் , நைட்ரஜன்,
பாஸ்பரஸ் என்று தனிமங்களும் ,
கூடவே உப்பில் உள்ள சோடியம்
மற்றும் பொட்டசியம், மக்னிசியம்
போன்ற பல தனிமங்கள் தேவை.
அவை இல்லை என்றால் உயிர் வாழ
இயலாது என்பது அனைவர்க்கும்
தெரியும். மேலும் தங்கம், வெள்ளி ,
அலுமினியம் போன்ற பல தனிமங்கள்
நம் வாழ்வில் பின்னிப்
பிணைந்துள்ளன .
இந்தத் தனிமங்களை ஒன்று , இரண்டு,
மூன்று என்று வரிசைப்படுத்தி அறிவியலாளர்கள்
ஓர்
அட்டவணையை ஏற்படுத்தியுள்ளனர்
( PERIODIC TABLE) . இந்தத் தனிமங்களைப்
பற்றி ஆராய்ந்து அதன் அமைப்பு,
குணங்கள் , பயன்கள்
போன்றவற்றை அறிந்து , அவைகளைப்
பயன்படுத்தி , நாம்
வாழ்வை இனிதே நடத்த
அறிவியலாளர்கள்
வழி வகுத்திருக்கிறார்கள்.

மாரடைப்பு வந்தால் உயிருக்குப்
போராடும் ஒருவருக்குத்
தேவையான , ஆக்சிஜன் மற்றும் பல
மருந்துகளைக் கொடுத்து ,
பாசக்கயிறைப்
போட்டு இழுத்துக்
கொண்டிருக்கும் எமனிடம்
போராடி , அந்த
பாசக்கயிறை அறுத்து,
போய்க்கொண்டிருந்த
உயிரை மீண்டும் கொண்டு வர
உதவுவார் மருத்துவர் .
ஒவ்வொரு தனிமங்களின்
குணங்களை வெகு நாள்
ஆய்ந்து அறிந்த அறிவியலாளர்கள்
பணி தான்
அவர்களுக்கு உதவியாயிருக்கின்றது.
இந்த தனிமங்கள் எல்லாம் பூமியில்
கிடைக்கின்றன .

பூமிக்கு இவை எப்படி வந்தன ?
நட்சத்திரங்களில் தான் முதலில்
இவை எல்லாம் உருவாகின
என்று அறிவியலாளர்கள்
சொல்லுகிறார்கள் . ஏன் பூமியில்
நாம் காணும் அனைத்துப்
பொருட்களும்
நட்சத்திரத்திலிருந்துதான்
உருவாயின .

நட்சத்திரத்திலிருந்து அவை பூமிக்கு எப்படி வந்தன ?
நம் சூரியன் என்ற நட்சத்திரத்தில்
இது போன்ற பொருட்கள் உருவாகிக்
கொண்டிருக்கின்றது .
ஆனால் நம் சூரியனில் உருவாகும்
பொருட்கள் நமக்குக் கிடைக்காது .
நம்முடைய சூரியனுடைய
தாத்தாவாகிய முதல்
தலைமுறை நட்சத்திரம்
உருவாக்கியதை நாம்
அனுபவிக்கிறோம் .
முன்றாம் தலைமுறையைச் சேர்ந்த
நமது சூரியன் உருவாக்கும்
பொருட்கள் நமக்குப் பின்னால் வரும்
தலைமுறைக்கும் ,
உயிர்களுக்குத்தான்
உபயோகமாகும் .

எப்படி? 

சுமார்
1370 கோடி ஆண்டுகளுக்கு முன்
தோன்றி , ஒரு பலூனைப் போல
விரிவடைந்த இந்த பிரபஞ்சத்தின்
ஆரம்பத்தில்
இரண்டே இரண்டு தனிமங்கள் தான்
இருந்தது . அவை ஹைட்ரஜன் மற்றும்
ஹீலியம் ( சுமார் 75 சதவீதம்
ஹைட்ரஜன் , 25 சதவீதம் ஹீலியம்) .
வாயுக்களான
இவை இரண்டுமல்லாமல் நாம்
காணும் நட்சத்திரங்கள் , கோள்கள்
எதுவுமே , ஏன் எந்த தூசும் கூட
பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இல்லை.
ஆச்சரியம் என்னவென்றால் அந்த
இரண்டு தனிமங்கள் ( வாயுக்கள்) தான்
இப்போது நாம் காணும்
கோடிக்கணக்கான
நட்சத்திரங்களும் , அதைச் சுற்றிவரும்
கோள்களும் , இந்த பூமியும் , அதில்
நாம் காணும் அனைத்துப்
பொருட்களுமாக
உருமாறின .

எப்படி ?
பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் தோன்றிய
ஹைட்ரஜன் அணுக்களின்
ஈர்ப்புவிசையினால் ஏற்பட்ட
பிணைப்பினால் தான் பிரபஞ்சத்தின்
முதல் தலைமுறை நட்சத்திரங்கள்
உருவாகின . பல கோடி வெப்பத்தைக்
கொண்ட இந்த நட்சத்திரத்தின் உள்ளே ,
அந்த வெப்பத்தினால் ஹைட்ரஜன்
அணுக்கள் இணைந்து ஹீலியம் என்ற
தனிமம் புதிதாக உருவாகியது .
இந்த இணைப்பில் தோன்றும் ஆற்றல்
தான் ஒளியாகிறது.
நட்சத்திரங்களுக்குள்ளே தொடர்ந்து பல
கோடி ஆண்டுகளாக இந்த
இணைப்பு நடந்துகொண்டே இருக்கின்றது.
நட்சத்திரதிற்குள்ளே இரண்டு ஹைட்ரஜன்
இணைந்து ஒரு ஹீலியம்
அணு புதிதாக உருவாவதுபோல ,
கூடவே இன்னும் பல
அணுச்சேர்க்கைகள்
நடக்கின்றன . புதிதாக உண்டான
இரண்டு ஹீலியம் அணுக்கள்
இணைந்து ' பெரிலியம்' என்ற தனிமம்
உண்டாகிறது . அதோடு நிற்காமல்
ஒரு ஹீலியம் அணுவும்
ஒரு பெரிலியம் அணுவும்
சேர்ந்து உயிர்களுக்குத்
தேவையான முக்கியமான தனிமம்
' கார்பன் ' உருவாகிறது.
புதிதாக தோன்றிய அணுக்களின்
இணைப்பு மேலும் தொடர்கிறது .

இரண்டு பெரிலியம் அணுக்கள்
இணைந்து நம் உயிரின் ஆதாரமான
பிராணவாயு ( OXYGEN)
உருவாகிறது.
இரண்டு கார்பன் அணுக்கள்
இணைந்து ஒரு ' மெக்னீசியம் '
அணு உருவாகிறது. இப்படி பற்பல
அணுச்சேர்க்கைகள்
நடந்து ஒன்று ,
இரண்டு என்று தனிமங்களை வரிசைப்படுத்திய
அட்டவணையில் உள்ள 26 என்ற எண்
கொண்ட
இரும்பு வரை நட்சத்திரங்களுக்கு உள்ளே பெருமளவில்
உற்பத்தியாகிறது .
நட்சத்திரங்களுக்குள் உள்ள சுமார்
கோடி டிகிரி வெப்பத்தில் தான்
இந்த அணுச்சேர்க்கைகள் நடக்க
முடிந்தது .
அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில்
புதிய
தனிமங்களை உண்டாக்கும் பணியில்
மனிதன் இறங்கி சில
தனிமங்களை உண்டாக்கி வெற்றியும்
பெற்றுள்ளான் . முன்னதாக
பூமியில் உள்ள
தனிமங்களிலிருந்து தான்
அவை உருவாக்கப்பட்டன . சிறிய
அளவில் தான்
இவைகளை உண்டு பண்ண முடியும் .
பெருமளவில் பூமியில்
கிடைப்பவை நட்சத்திரங்களில்
உற்பத்தியானவை .

தனிமங்களின் அட்டவணையில்
இரும்பிற்கு மேல் உள்ள
தனிமங்களான தங்கம் , வெள்ளி,
யூரேனியம் போன்றவை உண்டாக ,
நட்சத்திரங்களில் உள்ள வெப்பத்தைக்
காட்டிலும் அதிக வெப்பம் தேவை.
அதனால்
நட்சத்திரங்களுக்குள்
தனிமங்கள் உற்பத்தி, மூடப்பட்ட
தொழிற்சாலை போல
நின்று விடுகிறது .

பிறகு எப்படி அவை உருவாகின?
அந்த முதல் தலைமுறை சூரியன்
தன வாழ்நாட்கள் முடிந்தபின்
அதிபயங்கரமாக வெடித்துச் சிதறும்.
பிரபஞ்சத்தில் அது மிக அற்புதமான
காட்சியாகும் . சூப்பர்
நோவா என்று கூறுவார் இதனை .
அப்படி வெடிக்கும்
போது உண்டாகும் அதிபயங்கர
வெப்பத்தில் இரும்பு அணுக்களும்
அணுச்சேர்க்கையால்
இணைந்து இரும்பிற்கு மேல்
அணு எண் கொண்ட யூரேனியம் ,
தங்கம் , வெள்ளி போன்ற
மற்றெல்லா தனிமங்களும் உண்டாகி ,
நட்சத்திரம் வெடிக்கும் போது ,
வாயுக்களாக பிரபஞ்சத்தில்
தூக்கி எறியப்பட்டன . பல
கோடி மைல்கள்
பரந்து விரிந்து கிடக்கும், பார்க்க
பரவசமூட்டும் இந்த
வாயுக்கூட்டங்களை ' நேபுல்லா'
என்றழைப்பர். இந்த நேபுல்லா என்ற
வாயுக்கூட்டதில்
நட்சத்திரத்தில் உருவான
எல்லா தனிமங்களுடன் , பிரபஞ்சத்தில்
ஏற்கனவே உள்ள ஹைட்ரஜன்
வாயுவும் கலந்திருக்கும் .
பிரசவ மருத்துவமனையில் பெண்கள்
அனுமதிக்கப்படும்போது எல்லோருக்கும்
தெரியும், குழந்தைகள் பிறக்கப்
போகின்றன என்று . அதே போல
பிரபஞ்சத்தில் காணும் இந்த
நேபுல்லா என்ற
வாயுக்கூட்டங்களை காணும்
விண்வெளி ஆய்வாளர்களுக்கு அந்த
வாயுக்கூட்டத்தில்
' நட்சத்திரங்கள் ' பிறக்கப் போகின்றன
என்று தெரியும் காரணம் ,
ஈர்ப்பு விசை தன்
பணியை அங்கு துவக்கும் .

ஹைட்ரஜன் அணுக்கள்
ஒன்றை ஒன்று இழுத்து, வெப்பமும்
அடர்த்தியும் அதிகமாகி , புதிய
அடுத்த தலைமுறை நட்சத்திரம்
( நமது சூரியனைப் போல )
உருவாகும் . நட்சத்திரத்தின் தோற்றம்
ஒரு அதி பயங்கர வெடிப்புடனும் ,
அதிர்வுடனும் நடக்கும் . புதிதாக
தோன்றிய நட்சத்திரத்தைச் சுற்றி ,
தூசுகளும் , வாயுக்களும்
வெடிப்பினால்
எறியப்பட்டு அவைகள் அந்த
நட்சத்திரத்தை சுற்ற ஆரம்பிக்கும்.
அவைகளும் ஈர்ப்பு விசையால்
இணைந்து , முதலில்
சிறு சிறு பாறைகளாக உருவாகி,
அந்தப் பாறைகள் மேலும் ஒன்றுடன்
ஒன்று இணைந்து , அந்த
நட்சத்திரத்தைச் சுற்றிவரும்
கோள்களாக உருவாகும். அந்த
தூசுகளிலும் , வாயுக்களிலும்
தான் எல்லா தனிமங்களும் உள்ளனவே .
அதனால்தான் அந்தக் கோள்களில்
ஒன்றான நமது பூமியிலும்
அனைத்து தனிமங்களும்
கிடைக்கின்றன .
சூரியனைச் சுற்றிவரும் கோள்கள்
தவிர மற்ற பாறைகளிலும் (ASTEROID )
இந்த தனிமங்கள் இருக்கும்.
ஏனென்றால் சூரியன்
உருவாகும்போது உண்டான
கோள்களைப்போல
தோன்றியதுதான் அந்த பாறைகளும் .

நமது சூரிய குடும்பத்தைச்
சுற்றிவரும் அந்தப் பாறைகளில்
தங்கம் உட்பட பல தனிமங்கள்
இருப்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர் .
சமீபத்தில் ஒரு கோள் கண்டுபிடிக்கப்
பட்டது . பூமியை விட
இரண்டு மடங்கு பெரிய அந்தக் கோள்
முழுவதும் வைரங்கள்
நிறைந்து கிடக்கின்றன.
ஒருதடவை சென்று வந்தால்,
உலகத்தின் முதல் கோடீஸ்வரன்
ஆகிவிடலாம் . சிக்கல் என்னவென்றால்
அந்த கோள்
நாற்பது ஒளியாண்டுகள்
தொலைவில் உள்ளது .
எப்படியாவது முயற்சி செய்து அங்கே போய்
சேர்ந்து விடலாம்
என்று நினைப்போருக்கு ஒரு மோசமான
தகவல் என்னவென்றால் அங்கு வெப்பம்
சுமார் 4000
டிகிரி வரை உள்ளது என்பதுதான் .

பூமியில் உள்ள
சத்துக்களை எடுத்து விளையும்
பயிர்களைத் தின்று வளரும்
மிருகங்களையும் , அந்த
மிருகங்களையும் ,
பயிர்களையும்
உண்டு வளரும் நாமும்
அடிப்படையில் நட்சத்திரத்தில்
இருந்து வந்தவர்கள் தான் .
இனி யாரவாது நம்மைப்
பார்த்து நீங்கள்
எங்கிருந்து வருகிறீர்கள்
என்று கேட்டால் , எந்த வித
ஐயமுமின்றி ' நான்
நட்சத்திரத்திலிருந்து வருகிறேன் '
என்று கூறலாமல்லவா ?
நட்சத்திரத்தின்
உள்ளே உற்பத்தியான நாம் எல்லாம்
அதன் பிள்ளைகள் அல்லவா ? நாம்
அனைவரும் ஒரு தாய் மக்களல்லவா ?
ஒரு காலத்தில்
ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி,
புவியின் பல பகுதிகளுக்கு பரவிச்
சென்ற மனிதம் ஒரு மாபெரும்
குடும்பம் என்பதை இந்த அறிவியல்
உண்மை மீண்டும்
நிரூபிக்கின்றதல்லவா ?

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...