தகவல் அறியும் உரிமை சட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும் ,அதனை எப்படி பயன்படுத்துவது என்பதனை பற்றியும் அறிய ஒருநாள் நேரடி இலவச பயிற்சி முகாம்

இந்தியன் குரல் அமைப்பின் சார்பாக நேற்று நடத்தப்பட்டது .நான் என் நண்பர்களுடன் சென்று இருந்தேன் . இவை எல்லோரும்,முக்கியமாக இன்றைய இளைஞர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய பயிற்சி முகாம் .மிக சரியான முறையில் ,தெளிவான கருத்துகளுடன் ,எல்லோருக்கும் புரியும் வகையில் மிக எளிமையாக
எடுத்துரைகின்றனர். இச்சட்டத்தினை முறையாக பயன்படுத்தியதன் மூலம் தங்களுக்கு கிடைத்த அனுபவத்தை பலரும் எங்களுடன் பகிர்ந்து கொண்டனர் .நமக்கான உரிமைகளை பெற ,நமக்கு கொடுக்க பட்டிருக்கும் மிகப்பெரிய எழுத்து ஆயுதம் தகவல் உரிமை சட்டம் . நாம் விழித்து விட கூடாது என்பதற்காகவே ,அரசாங்கம் இச்சட்டத்தினை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தாமல் இருக்கிறது . .எட்டு ஆண்டுகளாக இதனை பற்றி அறிந்துகொள்ள தவறி விட்டோமே என்ற வருத்தம் இருந்தது .இனிமேலும் தாமதிக்காது அதனை முறையாக பயன்படுத்துவோம்,இச்சட்டத்தினை மற்றவர்களுக்கும் எடுத்துரைப்போம் என்ற உறுதிமொழியை எங்களுக்குள் எடுத்து கொண்டோம் .அரசு அலுவலகங்களில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்க ,அனைத்து அலுவலகங்களின் தகவல்களை பெற(தனியார் நிறுவனங்கள் உட்பட ),எந்த வித லஞ்சமும் கொடுக்காது உரிய நேரத்தில் அரசு அலுவலகங்களில் இருந்து நமக்கான ஆவணங்களை பெற .....நமக்கு கிடைத்த ஒரு துடுப்பு இச்சட்டம் .நண்பர்களே ,இவை எல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்பட்டு வராது ,எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என குறைகூருவதை தவிர்த்து ,நம்மிடையே இருக்கும் இச்சட்டத்தினை ஒருமுறை அறிந்துகொண்டு பயன்படுத்திதான் பாருங்களேன் ! இன்றைக்கு வெளிவந்திருக்கும் அனைத்து ஊழல்களும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாகவே வெளிகொண்டுவரபட்டன என்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை . அனைவர்க்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தினை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்குடன் ,சத்தமே இல்லாமல் மக்களிடையே மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி வரும் இந்தியன் குரல் அமைப்பிற்கு ( Voice of Indian )நம் அனைவரின் சார்பாக வாழ்த்துகளையும் ,நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் .அடுத்த பயிற்சி முகாம் வரும் ஜனவரி 5 ம் தேதி நடைபெற உள்ளது . அனைவரும் கலந்துகொள்ளுங்கள் .மேலும் உங்கள் நண்பர்களுக்கும் இத்தகவலை பகிருங்கள். https://www.facebook.com/myvoiceofindian அடுத்த பயிற்சி முகாம் :https://www.facebook.com/events/609077205816968/?notif_t=plan_user_joined மேலும் தெரிந்துகொள்ள : http://www.voiceofindian.org/training-class-rti-act/ நன்றி : Bala Subramanian

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...