“ பட்டுப்
பூச்சியை அழித்து சேலை கட்டுவதா”
என்பார்கள் ஜீவகாருண்யம்
பேசுபவர்கள் .
அவர்களுக்கு ஒரு சந்தோஷச் செய்தி .
கொஞ்சம்கூட அசைவம் கலக்காத
வாழைப் பட்டு நூல் உருவாக்கும்
இயந்திரம் கண்டறிந்திருக்கிறார்
தூத்துக்குடி விஞ்ஞானி முருகன் .
இலை , காய் , பழம் , பூ, தண்டு. . என
அனைத்து பாகங்களாலும் பயன்
தருவது வாழை. அனைத்தையும்
எடுத்து ,
இனி எதற்குமே பயன்படாது என்று கழிவாக
வீசும் வாழையைக்கூட பயன்படுத்த
முடியும் என்கிறார் அவர் . வாழைக்
கழிவுகளில்
இருந்து பட்டு நூலிழை பிரித்தெடுக்கும்
தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ள
அவர் , தமிழகத்தில்
வாழை பட்டு நூற்பாலை தொடங்க
வேண்டும் என்ற
குறிக்கோளோடு லட்சிய
பயணத்தை தொடர்ந்து வருகிறார் .
தூத்துக்குடி பிரையன்ட் நகரைச்
சேர்ந்தவர் கே . முருகன் (41 ) .
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
படித்துள்ள இவர் சிறிது காலம்
தனியார் நிறுவனங்களில்
பணியாற்றினார் . ஆனால்,
அவருக்கு அந்த வேலைகளில்
நாட்டமில்லை ,
ஆராய்ச்சி செய்து புதிய
இயந்திரங்களை கண்டுபிடிப்பதிலேயே ஆர்வமாக
இருந்தார் .
இவர் ஒருமுறை திருவைகுண்டம்
பகுதிக்கு சென்ற
போது விவசாயிகள் வாழைக்
கழிவுகளை எரித்துக்
கொண்டிருந்ததைப் பார்த்தார்.
வாழைக்
குலை அறுவடைக்கு பிறகு ஒட்டுமொத்த
வாழையும் கழிவாக
மாறிவிடுகிறது . அடுத்த
பருவத்தின்போது இந்த
கழிவுகளை அழிக்க விவசாயிகள்
மிகவும் சிரமப்படுவதை முருகன்
அறிந்தார் .
இந்த கழிவுகளில்
இருந்து ஏதாவது பயனுள்ள பொருள்
தயாரிக்க முடியுமா என
யோசித்தார் .
பூ கட்டுவதற்கு மட்டுமே பயன்படும்
வாழை நாரில் இருந்து நூல்
தயாரிக்கலாமா என்ற
முடிவுக்கு வந்தார் . அதன்
விளைவாக உருவானதுதான்
வாழைப்
பட்டு நூலிழை பிரித்தெடுக்கும்
இயந்திரம் என உற்சாகமாக
கூறுகிறார் முருகன் .
தனது ஆய்வுக் கூடத்தில் புதிதாக
உருவாக்கிய நவீன இயந்திரத்தில்
வாழை மட்டையில்
இருந்து பட்டு நூலிழை பிரித்தெடுக்கும்
பணியில் ஈடுபட்டிருந்த
முருகனை சந்தித்தோம் . தன்
முயற்சி பற்றி அவர் கூறுகிறார் . .
“ வாழை மட்டையில்
பட்டு நூலிழை இருப்பதையும் ,
அதைப் பிரித்தெடுக்கும்
தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க
மத்திய அரசு கோடிக்கணக்கில்
நிதியுதவி அளித்திருப்பதையும்,
அந்த தொழில்நுட்பம்
இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும்
அறிந்தேன். எனவே அந்த முயற்சியில்
ஈடுபட்டேன்.
அதன் விளைவாக 2006 ல் சிறிய
இயந்திரம் ஒன்றை உருவாக்கினேன் .
இந்த
இயந்திரத்துக்கு சென்னை ஐ. ஐ. டி .
சார்பில் சிறந்த கண்டுபிடிப்புக்கான
விருது , ரூ . 20 ஆயிரம் ரொக்க
பரிசு கிடைத்தது.
அது எனக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியது .
இதையடுத்து இயந்திரத்தை நவீனமாக்கும்
முயற்சியில் இறங்கினேன். ஐ. ஐ. டி .
விருதைத்
தொடர்ந்து பல்வேறு இடங்களில்
இருந்தும்
எனது கண்டுபிடிப்புக்கு ஆதரவு பெருகியது .
மத்திய அறிவியல் தொழில்நுட்பக்
கழகம் ரூ . 4 லட்சம்
நிதயுதவி வழங்கியது . அதனைக்
கொண்டு இயந்திரத்தை நவீனமாக்கினேன்.
2009 ல் இப்பணி முடிவடைந்தது .
மத்திய அறிவியல் தொழில்நுட்பக்
கழகம் மீண்டும் ரூ. 26 லட்சம்
நிதியுதவி வழங்கியது . அதனைக்
கொண்டு தானியங்கி நவீன
இயந்திரத்தை உருவாக்கினேன் . இந்தப்
பணி இந்த வாரம்தான்
முடிவடைந்துள்ளது .
மத்திய அறிவியல் தொழில்நுட்ப
கழகம், மத்திய உயிரி தொழில்நுட்ப
ஆராய்ச்சி மையம் போன்றவற்றில்
இருந்து விஞ்ஞானிகள் குழுவினர்
இங்கு வந்து எனது இயந்திரத்தை ஆய்வு செய்து அங்கீகாரம்
அளித்துள்ளனர் . மேலும்
சென்னை ஐ. ஐ. டி . , புனேயில் உள்ள
மத்திய பருத்தி ஆராய்ச்சி மையம் ,
திருச்சி வாழை ஆராய்ச்சி மையம்
போன்ற பல்வேறு இடங்களில்
எனது கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள்
முன்பு செய்து காட்டியுள்ளேன் .
இதையடுத்து நான் கண்டுபிடித்த
தொழில்நுட்பத்துக்கு 2012 ல்
காப்புரிமை கிடைத்தது.
எனது கண்டுபிடிப்பை முன்னாள்
ஜனாதிபதி அப்துல்கலாம் , தமிழக
முன்னாள் முதல்வர்
கருணாநிதி உள்பட பலர்
பாராட்டியுள்ளனர் .
வாழை மட்டையில்
இருந்து பட்டு நூலிழை பிரித்தெடுக்கும்
தொழில்நுட்பத்தைக்
கண்டுபிடித்து , அதற்கான
இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறேன்.
இந்த பட்டு நூலிழையை நூலாக
மாற்றி நூற்கண்டுகளில்
சுற்றினால்தான் தறிகளில்
பயன்படுத்தி ஆடை தயாரிக்க
முடியும் .
வாழை பட்டு நூலானது வாழை மட்டையின்
நீளம் மட்டுமே இருக்கும். இந்த
நூல்களை ஒன்றோடு ஒன்று இணைத்து நூற்கண்டு உருவாக்க
வேண்டும். அதற்கான
ஆராய்ச்சியில்தான்
தற்போது ஈடுபட்டுள்ளேன் . இந்த
ஆராய்ச்சிக்கு மத்திய
உயிரி தொழில்நுட்ப
ஆராய்ச்சி மையம்
நிதியுதவி அளிப்பதாக
தெரிவித்துள்ளது . விரைவில்
நிதியுதவி கிடைக்கும் என
நம்புகிறேன் .
வாழை பட்டு நூலிழையை நூற்கண்டுகளாக
மாற்றினால்தான் இந்த
தொழில்நுட்பம் முழுமை பெறும் .
அதற்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள்
ஆகும்.
வாழை மட்டையில்
இருந்து நூலிழை பிரித்தெடுக்கும்
தொழில்நுட்பத்தை தருமாறு பல்வேறு நிறுவனங்கள்
என்னை அணுகின. ஆனால் ,
தொழில்நுட்பத்தை முழுமையாக
உருவாக்க வேண்டும்
என்பதே எனது நோக்கம்.
அவ்வாறு உருவாக்கும்போது சைவ
பட்டு நூல் கிடைக்கும்.
வாழை விவசாயிகளுக்கும் இந்த
கழிவுகள் மூலம் கூடுதல்
வருமானம் கிடைக்கும்.
உயிரினங்களுக்கு சிறிதுகூட
தீங்கு விளைவிக்கக்
கூடாது என்பதை பலரும்
கொள்கையாகக்
கொண்டிருக்கின்றனர் . பட்டுப்
பூச்சிகளை அழித்து உருவாக்கப்படும்
பட்டுச்
சேலைகளை அணிவது அவர்களுக்கு சற்று நெருடலாக
இருக்கும். வாழைப்
பட்டு முழு சைவம் என்பதால்,
எந்தவித நெருடலும் இல்லாமல்
பயன்படுத்தலாம் .
இந்த 7
ஆண்டு ஆராய்ச்சிகளுக்கு இடையே வாழைத்
தண்டில்
இருந்து பஞ்சு உருவாக்கினேன் .
அதை வெட்டுக் காயங்களில்
பருத்திப் பஞ்சுக்கு பதிலாக
வைத்தால் , விரைவில் காயங்கள்
குணமாகும் என்பதும்
தெரியவந்துள்ளது . மேலும்
வாழைத் தண்டில்
இருந்து இனிப்புகள், ஜூஸ்
போன்றவற்றையும்
உருவாக்கியுள்ளேன் .
தூத்துக்குடி அரசு பொறியியல்
கல்லூரி மாணவர்கள்
சிலருக்கு புதிய
இயந்திரங்களை உருவாக்குவது தொடர்பாக
பயிற்சியும் அளித்து வருகிறேன் .
எனது இந்த
ஆராய்ச்சிக்கு மனைவி லலிதா பக்கபலமாக
இருக்கிறார் . சிரமப்படும் நேரத்தில்
என் குடும்பத்தினரும்
பல்வேறு நிதியுதவிகளை அளித்து வருகின்றனர் .
தொழில்நுட்பத்தை முழுமையாக
கண்டறிந்து இந்த பகுதியில் வாழைப்
பட்டு நூற்பாலை தொடங்க
வேண்டும் என்பது குறிக்கோள் .
அது விரைவில் நிறைவேறும் ”
என்றார் முருகன்.
பூச்சியை அழித்து சேலை கட்டுவதா”
என்பார்கள் ஜீவகாருண்யம்
பேசுபவர்கள் .
அவர்களுக்கு ஒரு சந்தோஷச் செய்தி .
கொஞ்சம்கூட அசைவம் கலக்காத
வாழைப் பட்டு நூல் உருவாக்கும்
இயந்திரம் கண்டறிந்திருக்கிறார்
தூத்துக்குடி விஞ்ஞானி முருகன் .
இலை , காய் , பழம் , பூ, தண்டு. . என
அனைத்து பாகங்களாலும் பயன்
தருவது வாழை. அனைத்தையும்
எடுத்து ,
இனி எதற்குமே பயன்படாது என்று கழிவாக
வீசும் வாழையைக்கூட பயன்படுத்த
முடியும் என்கிறார் அவர் . வாழைக்
கழிவுகளில்
இருந்து பட்டு நூலிழை பிரித்தெடுக்கும்
தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ள
அவர் , தமிழகத்தில்
வாழை பட்டு நூற்பாலை தொடங்க
வேண்டும் என்ற
குறிக்கோளோடு லட்சிய
பயணத்தை தொடர்ந்து வருகிறார் .
தூத்துக்குடி பிரையன்ட் நகரைச்
சேர்ந்தவர் கே . முருகன் (41 ) .
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
படித்துள்ள இவர் சிறிது காலம்
தனியார் நிறுவனங்களில்
பணியாற்றினார் . ஆனால்,
அவருக்கு அந்த வேலைகளில்
நாட்டமில்லை ,
ஆராய்ச்சி செய்து புதிய
இயந்திரங்களை கண்டுபிடிப்பதிலேயே ஆர்வமாக
இருந்தார் .
இவர் ஒருமுறை திருவைகுண்டம்
பகுதிக்கு சென்ற
போது விவசாயிகள் வாழைக்
கழிவுகளை எரித்துக்
கொண்டிருந்ததைப் பார்த்தார்.
வாழைக்
குலை அறுவடைக்கு பிறகு ஒட்டுமொத்த
வாழையும் கழிவாக
மாறிவிடுகிறது . அடுத்த
பருவத்தின்போது இந்த
கழிவுகளை அழிக்க விவசாயிகள்
மிகவும் சிரமப்படுவதை முருகன்
அறிந்தார் .
இந்த கழிவுகளில்
இருந்து ஏதாவது பயனுள்ள பொருள்
தயாரிக்க முடியுமா என
யோசித்தார் .
பூ கட்டுவதற்கு மட்டுமே பயன்படும்
வாழை நாரில் இருந்து நூல்
தயாரிக்கலாமா என்ற
முடிவுக்கு வந்தார் . அதன்
விளைவாக உருவானதுதான்
வாழைப்
பட்டு நூலிழை பிரித்தெடுக்கும்
இயந்திரம் என உற்சாகமாக
கூறுகிறார் முருகன் .
தனது ஆய்வுக் கூடத்தில் புதிதாக
உருவாக்கிய நவீன இயந்திரத்தில்
வாழை மட்டையில்
இருந்து பட்டு நூலிழை பிரித்தெடுக்கும்
பணியில் ஈடுபட்டிருந்த
முருகனை சந்தித்தோம் . தன்
முயற்சி பற்றி அவர் கூறுகிறார் . .
“ வாழை மட்டையில்
பட்டு நூலிழை இருப்பதையும் ,
அதைப் பிரித்தெடுக்கும்
தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க
மத்திய அரசு கோடிக்கணக்கில்
நிதியுதவி அளித்திருப்பதையும்,
அந்த தொழில்நுட்பம்
இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும்
அறிந்தேன். எனவே அந்த முயற்சியில்
ஈடுபட்டேன்.
அதன் விளைவாக 2006 ல் சிறிய
இயந்திரம் ஒன்றை உருவாக்கினேன் .
இந்த
இயந்திரத்துக்கு சென்னை ஐ. ஐ. டி .
சார்பில் சிறந்த கண்டுபிடிப்புக்கான
விருது , ரூ . 20 ஆயிரம் ரொக்க
பரிசு கிடைத்தது.
அது எனக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியது .
இதையடுத்து இயந்திரத்தை நவீனமாக்கும்
முயற்சியில் இறங்கினேன். ஐ. ஐ. டி .
விருதைத்
தொடர்ந்து பல்வேறு இடங்களில்
இருந்தும்
எனது கண்டுபிடிப்புக்கு ஆதரவு பெருகியது .
மத்திய அறிவியல் தொழில்நுட்பக்
கழகம் ரூ . 4 லட்சம்
நிதயுதவி வழங்கியது . அதனைக்
கொண்டு இயந்திரத்தை நவீனமாக்கினேன்.
2009 ல் இப்பணி முடிவடைந்தது .
மத்திய அறிவியல் தொழில்நுட்பக்
கழகம் மீண்டும் ரூ. 26 லட்சம்
நிதியுதவி வழங்கியது . அதனைக்
கொண்டு தானியங்கி நவீன
இயந்திரத்தை உருவாக்கினேன் . இந்தப்
பணி இந்த வாரம்தான்
முடிவடைந்துள்ளது .
மத்திய அறிவியல் தொழில்நுட்ப
கழகம், மத்திய உயிரி தொழில்நுட்ப
ஆராய்ச்சி மையம் போன்றவற்றில்
இருந்து விஞ்ஞானிகள் குழுவினர்
இங்கு வந்து எனது இயந்திரத்தை ஆய்வு செய்து அங்கீகாரம்
அளித்துள்ளனர் . மேலும்
சென்னை ஐ. ஐ. டி . , புனேயில் உள்ள
மத்திய பருத்தி ஆராய்ச்சி மையம் ,
திருச்சி வாழை ஆராய்ச்சி மையம்
போன்ற பல்வேறு இடங்களில்
எனது கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள்
முன்பு செய்து காட்டியுள்ளேன் .
இதையடுத்து நான் கண்டுபிடித்த
தொழில்நுட்பத்துக்கு 2012 ல்
காப்புரிமை கிடைத்தது.
எனது கண்டுபிடிப்பை முன்னாள்
ஜனாதிபதி அப்துல்கலாம் , தமிழக
முன்னாள் முதல்வர்
கருணாநிதி உள்பட பலர்
பாராட்டியுள்ளனர் .
வாழை மட்டையில்
இருந்து பட்டு நூலிழை பிரித்தெடுக்கும்
தொழில்நுட்பத்தைக்
கண்டுபிடித்து , அதற்கான
இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறேன்.
இந்த பட்டு நூலிழையை நூலாக
மாற்றி நூற்கண்டுகளில்
சுற்றினால்தான் தறிகளில்
பயன்படுத்தி ஆடை தயாரிக்க
முடியும் .
வாழை பட்டு நூலானது வாழை மட்டையின்
நீளம் மட்டுமே இருக்கும். இந்த
நூல்களை ஒன்றோடு ஒன்று இணைத்து நூற்கண்டு உருவாக்க
வேண்டும். அதற்கான
ஆராய்ச்சியில்தான்
தற்போது ஈடுபட்டுள்ளேன் . இந்த
ஆராய்ச்சிக்கு மத்திய
உயிரி தொழில்நுட்ப
ஆராய்ச்சி மையம்
நிதியுதவி அளிப்பதாக
தெரிவித்துள்ளது . விரைவில்
நிதியுதவி கிடைக்கும் என
நம்புகிறேன் .
வாழை பட்டு நூலிழையை நூற்கண்டுகளாக
மாற்றினால்தான் இந்த
தொழில்நுட்பம் முழுமை பெறும் .
அதற்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள்
ஆகும்.
வாழை மட்டையில்
இருந்து நூலிழை பிரித்தெடுக்கும்
தொழில்நுட்பத்தை தருமாறு பல்வேறு நிறுவனங்கள்
என்னை அணுகின. ஆனால் ,
தொழில்நுட்பத்தை முழுமையாக
உருவாக்க வேண்டும்
என்பதே எனது நோக்கம்.
அவ்வாறு உருவாக்கும்போது சைவ
பட்டு நூல் கிடைக்கும்.
வாழை விவசாயிகளுக்கும் இந்த
கழிவுகள் மூலம் கூடுதல்
வருமானம் கிடைக்கும்.
உயிரினங்களுக்கு சிறிதுகூட
தீங்கு விளைவிக்கக்
கூடாது என்பதை பலரும்
கொள்கையாகக்
கொண்டிருக்கின்றனர் . பட்டுப்
பூச்சிகளை அழித்து உருவாக்கப்படும்
பட்டுச்
சேலைகளை அணிவது அவர்களுக்கு சற்று நெருடலாக
இருக்கும். வாழைப்
பட்டு முழு சைவம் என்பதால்,
எந்தவித நெருடலும் இல்லாமல்
பயன்படுத்தலாம் .
இந்த 7
ஆண்டு ஆராய்ச்சிகளுக்கு இடையே வாழைத்
தண்டில்
இருந்து பஞ்சு உருவாக்கினேன் .
அதை வெட்டுக் காயங்களில்
பருத்திப் பஞ்சுக்கு பதிலாக
வைத்தால் , விரைவில் காயங்கள்
குணமாகும் என்பதும்
தெரியவந்துள்ளது . மேலும்
வாழைத் தண்டில்
இருந்து இனிப்புகள், ஜூஸ்
போன்றவற்றையும்
உருவாக்கியுள்ளேன் .
தூத்துக்குடி அரசு பொறியியல்
கல்லூரி மாணவர்கள்
சிலருக்கு புதிய
இயந்திரங்களை உருவாக்குவது தொடர்பாக
பயிற்சியும் அளித்து வருகிறேன் .
எனது இந்த
ஆராய்ச்சிக்கு மனைவி லலிதா பக்கபலமாக
இருக்கிறார் . சிரமப்படும் நேரத்தில்
என் குடும்பத்தினரும்
பல்வேறு நிதியுதவிகளை அளித்து வருகின்றனர் .
தொழில்நுட்பத்தை முழுமையாக
கண்டறிந்து இந்த பகுதியில் வாழைப்
பட்டு நூற்பாலை தொடங்க
வேண்டும் என்பது குறிக்கோள் .
அது விரைவில் நிறைவேறும் ”
என்றார் முருகன்.
