ஒரு வழியாக துவங்கியது பேச்சு பயிற்சி வகுப்பு

அறிவித்து பல மாதங்களாகியும், கிடப்பில் போடப்பட்ட, விடுதி மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு, தற்போது துவங்கி உள்ளது.


தமிழகத்தில், 12 ஆயிரம் கல்லூரி மாணவர்கள்,
160 விடுதிகளில் தங்கி படிக்கின்றனர். இவர்களில், இளங்கலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின், ஆங்கில பேச்சுத் திறனை வளர்க்கும், சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை முடிவு செய்தது. ஒரு மாணவருக்கு, 2,800 ரூபாய் வீதம், 6,500 பேருக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, 1.83 கோடி ரூபாய், ஒதுக்கப்பட்டது. பயிற்சி அளிக்க, ஏழு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. கடந்த பட்ஜெட்டில், இத்திட்டம் அறிவிக்கப்பட்டாலும், பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், தற்போது கல்லூரி மாணவர் விடுதிகளில், ஆங்கில பயற்சி வகுப்பு துவங்கி உள்ளது. மாணவர்களின் கற்றல் திறன், பேசும் திறமை, உள்வாங்கும் திறன் போன்றவற்றை கணக்கிட்டு, அதில் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைத்தால், பள்ளி மாணவர்களுக்கும், திட்டம் விரிவுபடுத்தப்படும் என, தெரிகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...