உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் DD Amounts

அனைத்து பல்கலைக் கழகங்களின் DD Amounts: > உண்மைத்தன்மை என்றால் என்ன? ஒருவர் படித்து பட்டம் பெற்றபின் அப்பட்டம் (Convocation /Degree Certificate) அப்பல்கலைக்கழகத்தால் தான் வழங்கியது என்று அப்பல்கலைக்கழகம் மூலம் பெறும் சான்றே” உண்மைத்தன்மை” (Genuous) எனப்படும், (போலியாக படித்தது போன்று பட்டம் பெறுவதை
தடுக்கவே இந்த நடைமுறை). > சான்றிதழ் பெறும் முறை: தனிநபர் தனது படிப்பின் பட்டம் (Convocation /Degree) சான்றிதழின் ஒளிநகலுடன் (ஜெராக்ஸ் காபி) அதற்குண்டான கட்டணத் தொகைக்கான DD-ஐயும் இணைத்து சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அவர்களுக்கு அனுப்பி தனதுசான்றிதழின் உண்மைத்தன்மையை சான்றாக பெறலாம். > இந்த விண்ணப்பத்தினை தலைமையாசிரியர் வழியாகவும்,அல்லது, AEEO மூலமாகத் தான் அஞ்சல் மூலம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிப்பெற வேண்டும். > பல்கலைக்கழகமும் அதன் ,உண்மைத்தன்மைச் சான்று பெற DD கட்டணங்களும் பின்வருமாறு. 1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600 2. அழகப்பா பல்கலைக்கழகம்- 500 (தற்சமயம் மாற்றப்பட்டுள்ளது) 3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்-300 4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -100 5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000 6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500. 7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000 8. சென்னைப் பல்கலைக் கழகம்- துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. 9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் -1500 (தற்சமயம் மாற்றப்பட்டுள்ளது) 10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500 11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்-500 12. பெரியார் பல்கலைக் கழகம்- 250 13. Tamilnau teacher education university -375 (தற்சமயம் மாற்றப்பட்டுள்ளது) 14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. 15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275. -தோழமையுடன், தேவராஐன் , தஞ்சாவூர் .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...