எழுத்தறிவற்ற இந்தியர்கள் 28.7 கோடி பேர்: ஐ.நா அறிக்கையில் தகவல்


உலகில் கல்வியறிவு பெறாதவர்கள் அதிகமுள்ளவர்கள் நாடுகள் பட்டி யலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஐ.நா. அறிக்கையின் படி இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை 28.7 கோடியாக உள்ளது. ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு சார்பில் 2013-14 அனைவருக்கும் கல்வி இயக்க கண்காணிப்பு அறிக்கை
வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 1991-ம் ஆண்டு 48 சதவீதமாக இருந்தது. இது 2006-ம் ஆண்டு 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆயினும் மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக, கல்வியறிவு பெறாத வயதுவந்தோரின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமுமில்லை.இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டப்பட்ட அம்சங்கள்:இந்தியாவில் செல்வக் குடும்பத்தில் பிறந்த இளம்பெண்கள் உயர்கல்வி பெற்றுள்ளனர். ஆனால், ஏழைப் பெண்கள் கல்வி பெறவில்லை. இவ்விரண்டுக்கும் இடையே மிகுந்த ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. யாருக்கு அதிகம் கல்வியறிவு தேவையோ அவர்களுக்குக் கல்வி வழங்கும் இலக்கு தோல்வி யடைந்து விட்டதையே இது காட்டுகிறது.வரும் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு எட்டப்படவேண்டிய இலக்கு களை அடைய, மிகவும் வசதியற்ற சூழலில் வாழ்பவர்கள் தங்கள் இலக்கை அடைவதை உறுதி செய்ய வேண்டும். கல்வி சார்ந்த செலவுகளுக்காக மட்டும் ஆண்டுக்கு 12,900 கோடி டாலர்கள் (சுமார் ரூ.8 லட்சம் கோடி) அரசுகள் செலவிடுகின்றன.படிப்பறிவில்லாத வயது வந்தோரில் 55.7 கோடி பேர் அதாவது 72 சதவீதம் பேர் 10 நாடுகளில் வசிக்கின்றனர். தொடக்க கல்விக்குச் செல விடும் தொகையில் 10 சதவீதம் தரம்குறைந்த கல்வியால் வீணா கிறது. இதனால், குழந்தைகள் கல்வி பயில்வதை உறுதி செய்ய முடிவதில்லை. இதன் காரணமாக, ஏழை நாடுகளில் 4-ல் ஒரு குழந்தை ஒரு வாக்கியத்தைக் கூட படிக்க முடியாத நிலையில் உள்ளது.இந்தியாவின் வளமையான மாநிலங்களுள் ஒன்றான கேரளத் தில் ஒரு மாணவனின் கல்விக்காக ஆண்டுக்கு ரூ.42 ஆயிரத்து 548 செலவிடப்படுகிறது. இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் வளமான மற்றும் ஏழ்மை யான மாநிலங்களில் மிகுந்த ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. இருப்பினும், வளமான மாநிலத்தில் உள்ள ஏழை மாணவிகள் கணிதத்தில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.தமிழகத்தின் நிலைவளமான மாநிலங்களான மகாராஷ்டிரம் மற்றும் தமிழகத்தில் பெரும்பாலான கிராமப்புற மாண வர்கள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பக் கல்வியை (5-ம் வகுப்பு) நிறைவு செய்தனர். இருப்பினும் மகாராஷ்டிர மாநிலத்தில் 5-ம் வகுப்புப் படிப்பவர்களில் 44 சதவீதம் பேரும், தமிழகத்தில் 53 சதவீதம் மாணவர்களும் மட்டுமே இரட்டை இலக்க வகுத்தல் கணக்குக்கு விடை காண முடிபவர்களாக இருக்கின்றனர்.மகாராஷ்டிரம், தமிழக மாநிலங்களில் ஊரகப் பகுதிக ளில் உள்ள வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் மாணவர் களை விட மாணவிகள் நன்றாகப் படிக்கின்றனர். 3-ல் 2 மாணவி கள் இரு இலக்க வகுத்தல் கணக்குக்குத் தீர்வு காணும் திறன் பெற்றுள்ளனர். மத்தியப் பிரதேசத்தை விட சிறிய அளவிலேயே மகாராஷ்டிர ஊரகப் பகுதி மாணவ, மாணவியர் முன்னணியில் உள்ளனர். மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரேதச மாநிலங்களில் நிலவும் வறுமை, குழந்தைகள் ஆரம்பக் கல்வியை நிறைவு செய்வதற்குப் பெரும் தடையாக உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ஏழை மாணவர்களில் 70 சதவீதம் பேர் மட்டுமே 5-ம் வகுப்பு வரை பயில்கின்றனர். மத்தியப் பிரதேசத்தில் 85 சதவீத ஏழை மாணவர்கள் ஆரம்பக்கல்வியை நிறைவு செய்கின்றனர்.இந்த இரு மாநிலங்களிலும், ஏழை மாணவிகளில் 5-ல் ஒரு வருக்குத்தான் அடிப்படைக் கணிதத்தைச் செய்யும் திறன் உள்ளது.இடைநிற்றல்நன்றாகப் படிப்பவர்களில் 15-வது வயதில் பள்ளியில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையைப் போல, கணிதத் தில் குறைவான மதிப்பெண் பெறும் 12 வயது மாணவர்கள் பள்ளியில் இருந்து இடை நிற்பது இருமடங்கு அதிகம்.மாணவர்களின் கல்வி பாதிக்கப் படுவதற்கு, ஆசிரியர்கள் வகுப் புக்கு முறையாக வராததும் ஒரு காரணமாகும். அதாவது, ஆசிரியர் பள்ளி அல்லது வகுப்புக்கு வராமல் தவிர்க்கும் வீதம் 10 சதவீதம் உயர்ந்தால் அது 1.8 சதவீத மாணவர்களின் வருகையைக் குறைக்கிறது.ஆசிரியர்களுடனான உறவுஅரசு இப்பிரச்சினையைக் களைய ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து நெருக்கமாகச் செயல் பட வேண்டும். ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வராமல் தவிர்ப்பதைத் தடுப்பது மற்றும் பாலின அடிப்படையிலான வன் முறை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள புதிய கொள்கைகள், நடத்தை விதிமுறைகள் வகுக்கப் பட வேண்டும். சட்டம் இயற்றும் அமைப்புகள், மாணவர்களின் கூடுதல் திறனில் கவனம் செலுத்தும் கொள்கை களை வகுப்பதிலும், அடிப்படைத் திறன்களை மாணவர்கள் பெறு வதையும் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...