பிற்படுத்தபட்டோர் பட்டியலில் மேலும் 60 பிரிவுகளை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிதாக 60 பிரிவுகளை சேர்ப்பதற்கு ஏற்ற வகையில் பட்டியலில் திருத்தம் செய்ய, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், தமிழகம், ஆந்திரா உள்பட 13 மாநிலங்கள் மற்றும்
புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் வசிக்கும் 60 பிற்படுத்தப்பட்ட பிரிவினரை, மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும்படி பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

இந்த பரிந்துரைகள் பற்றி அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர், இந்த 60 பிரிவினரையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், மத்திய - மாநில அரசு பணிகள் மற்றும் உயர் கல்வியில் இப்பிரிவினருக்கு இடஒதுக்கீடும், இதர சலுகைகளும் கிடைக்கும். 2011, டிசம்பர் வரையிலான பட்டியலில் 24 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 2,343 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (சாதிகள், உட்பிரிவுகள்) இடம் பெற்றுள்ளனர். இப்போது, புதிதாக 60 பிரிவுகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட உள்ளன.

இதுவரையில் மொத்தம் 30 அறிவிப்புகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்ட அரசிதழ் அறிவிப்புதான் கடைசியானது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளை கவரும் விதிதத்தில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...