ஐ.மு., கூட்டணி அரசின் லட்சிய திட்டமான உணவு பாதுகாப்பு சட்டம், அமலுக்கு
வந்த சில மாதங்களில், ஏழு மாநிலங்களில் ஒரளவு மட்டுமே
செயல்படுத்தப்பட்டுள்ளது; மேலும், மூன்று
மாநிலங்களில்,அமல்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த விலையில் : இந்தியாவின் மொத்த மக்கட்தொகையில், மூன்றில் இரண்டு மக்களுக்கு, குறைந்த விலையில், உணவு தானிய பொருட்கள் கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் வகையில், உணவு பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. கடந்தாண்டு, செப்டம்பர் மாதம், பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தை, லோக்சபா தேர்தலுக்கு முன், அமல்படுத்த மத்திய அரசு, தீவிரம் காட்டி வருகிறது. இன்றைய நிலையில், ஏழு மாநிலங்களில் மட்டும், ஓரளவே இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன் : டில்லி, அரியானா, இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்ளில் அமல்படுத்தப்பட்டுள்ளது; இதில், ஒன்றிரண்டு தவிர, மற்ற மாநிலங்களில், ஓரளவு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில், இந்த திட்டத்தால் பயன் அடைய கூடியவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. உ.பி., தமிழகம், ஆந்திரா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில், இதற்கான பணிகள் இன்னும் துவங்கவில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், இத்திட்டத்தை, லோக்சபா தேர்தலுக்கு முன் அமல்படுத்திட தீவிரம் காட்டப்படுகிறது.