தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர்கள் காலியிடங்கள் ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப உயர்கல்வித்துறை
முடிவு செய்து, ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்தது.
சான்றிதழ் தகுதியை கொண்டு ஆசிரியர்களை நியமிப்பதற்காக சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.
சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டவர்களின் மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்கான நியமன ஆணையானது பின்னர் அறிவிக்கப்படும்.