நோயாளியின் ஈரலில் தனது பெயரை பதித்த டாக்டர்.

தங்களது பெயரை எங்காவது ஓரிடத்தில்
பதித்து விட பலரும் எண்ணுவர். ஆனால்
இங்கிலாந்தைச் சேர்ந்த சத்திர
சிகிச்சை நிபுணர் ஒருவர்
அவரது பெயரின்
முதலெழுத்துக்களை நோயாளியின்


ஈரலில் பதித்துள்ளார்.
ஸிமொன் ப்ரம்ஹோல் (Simon Bramhall) என்ற
அறுவை
சிகிச்சை நிபுணரே நோயாளியின்
ஈரலில்
முதலெழுத்துக்களை பதித்துள்ளார்.

பெயர் வெளியிடப்படாத நோயாயின்
ஈரலில் நஞ்சற்ற ஆர்கன் வாயுவினால்
எஸ்.பி. (SB) என பதித்துள்ளார்.
பின்னர்
அந்நாயோளிக்கு மீண்டுமொரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்
போது சக வைத்தியர் இதனைக்
கண்டுபிடித்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில்
விசாரணை செய்யப்பட்டு ஸிமோன்
பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அண்மையில் இங்கிலாந்தின்
பேர்மிங்ஹாமிலுள்ள குயீன் எலிஷபத்
வைத்தியசாலையில்
இடம்பெற்றுள்ளது.

இது குறித்து வைத்தியசாலையின்
நிர்வாகம் வெளியிட்டுள்ள
அறிக்கையில், ‘தவறாக
நடந்துகொண்டார் என்ற சந்தேகத்தில்
இடம்பெற்ற விசாரணையின் பின்னர்
பேர்மிங்ஹாம் பல்கலைக்கழக
வைத்தியசாலைகள் என்.எச்.எஸ்
நம்பிக்கை அமைப்பு சத்திரசிகிச்சை நிபுணரை இடைநிறுத்தியுள்ளது’
எனக் குறிப்பிட்டுள்ளனர்.
நாம்
பேசிக்கொண்டிருப்பது கையொப்ப
ஏட்டினைப் (ஆட்டோகிராப்) பற்றியல்ல
ஒரு நோயாளியைப் பற்றி என
நோயாளின் நலன் அக்கறை பிரசாரக்
குழுவின் ஜோய்ஸ் ரொபின் என்பவர்
கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...