ஆசிரியர் தகுதிதேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தளர்வு வழங்க வேண்டும் என்று தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் பள்ளிக் கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.இடஒதுக்கீட்டு பிரிவினர்ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண் (60 சதவீதம்) பெற்றால் தான் தேர்ச்சி பெற்றதாக அர்த்தம். இது அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவானது.அவர்களின் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை பொருத்து வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்பது இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு எதிரானது என்றும் தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு அளிக்கவேண்டும் என்றும் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திடம் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை புகார் தெரிவித்தது. தளர்வு அளிக்க வேண்டும்இதைத்தொடர்ந்து மத்திய அரசின் தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபுநய்யர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் ‘ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண்ணில் தளர்வு அளிக்க அரசாணையில் இடம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு தரவில்லை. எனவே மதிப்பெண் தளர்வை கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மதிப்பெண் தளர்வை கொடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...