தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த 12 ஆயிரம் ஆசிரியர், நேற்று விடுப்பு
எடுத்து, போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு 2 நாள் சம்பளம், நிறுத்தம்
செய்யப்படுவதுடன், துறை ரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என
இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.
இதுதொடர்பாக இயக்குனரக வட்டாரம் மேலும் கூறியதாவது: ஆசிரியர் பயிற்றுனர்கள்
மற்றும், "டெபுடேஷன்" முறையில், கூடுதல் ஆசிரியர்களை நியமித்து, மாணவர்
பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. போராட்டம் நடத்திய 2
நாளுக்கும், சம்பளம், நிறுத்தம் செய்யப்படும். மேலும் துறை ரீதியாக ஒழுங்கு
நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.