கிரெடிட் கார்டை ரத்து செய்யாத நிறுவனத்துக்கு அபராதம்- நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

கடன் அட்டையை ரத்து செய்ய வாடிக்கையாளர் முறையிட்டும் ரத்து செய்யாத எஸ்.பி. ஐ. கார்டு நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த ஏ. ஆராய்ச்சிய பிள்ளை
என்பவர், சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் ஏ. ஆராய்ச்சிய பிள்ளை கூறியிருந்ததாவது:
'' நான் எஸ். பி. ஐ. கார்டு நிறுவனத்திடம் கிரெடிட் கார்டு வசதி பெற்று இருந்தேன். அந்தக் கிரெடிட் கார்டினைப் பராமரிக்க முடியாத காரணத்தால் எஸ். பி. ஐ. கார்டு நிறுவனத்திடம் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும், ரத்து செய்யப்படும் கிரெடிட் கார்டுக்கு நிறுவனத்தின் சார்பில் வசூலிக்கப்படும் (full and final settlement) தொகையில் சலுகை வழங்க வேண்டும் என்று 2004, ஜூலை 23-ல் நிறுவனத்துக்குத் தெரிவித்தேன். ஆனால் நிறுவனத்தினர் கிரெடிட் கார்டினை ரத்து செய்யாமல் கிரெடிட் கார்டுக்கு வட்டி மற்றும் இதர தொகையினைச் சேர்த்துள்ளனர்.
மேலும், 23. 12. 2004 முதல் 17.8.2005 வரை மூன்று தவணையாக நிறுவனத்தின் ஏஜெண்ட் மூலம் மொத்தம் 15 ஆயிரத்து,800 ரூபாய் (full and final settlement) வசூலித்தனர்.
full and final settlement- கான மொத்தத் தொகையும் செலுத்தப்பட்டு விட்டது என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தெரிவித்த பின்பும் கிரெடிட் கார்டு அக்கவுண்ட் ரத்து செய்யப்படவில்லை.
மேலும் கடன் இல்லை என்ற சான்றிதழ் (no due certificate) அல்லது அது சம்பந்தமான கடிதம் கூட நிறுவனத்திடம் இருந்து அளிக்கப்படவில்லை.
இது எஸ். பி. ஐ. கார்டு நிறுவனத்தின் சேவை குறைபாடு. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் இதர செலவு ஆகியவற்றுக்குச் சேர்த்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்''
இவ்வாறு அந்த மனுவில் ஏ. ஆராய்ச்சிய பிள்ளை கூறியிருந்தார்.
இந்த மனு தொடர்பாக நுகர்வோர் நீதி மன்றத் தலைவர் ஆர். ரகுபதி, உறுப்பினர் ஜெ. ஜெயராம் ஆகியோர் விசாரணை நடத்தினர். எஸ். பி. ஐ. கார்டு நிறுவனம் எந்தவித காலதாமதமுமின்றி, புகார்தாரர் ஏ. ஆராய்ச்சிய பிள்ளையின் கிரெடிட் கார்டு அக்கவுண்ட்டை ரத்து செய்து, கடன் இல்லை எனும் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும்.
இதற்காக எந்தத் தொகையினையும் நிறுவனம் வசூலிக்கக் கூடாது. நிறுவனத்தின் சேவை குறைபாட்டுக்காக 10 ஆயிரம் ரூபாய், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 5 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 15 ஆயிரம் ரூபாயை எஸ்.பி.ஐ. கார்டு நிறுவனம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று சமீபத்தில் தீர்ப்பளித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...