வரலாற்றை "அனைத்துப் பாடங்களின் தாயஎன்று கூறுவார்கள். கணிதம், கணிப்பொறியியல் மோகத்தில் திளைத்த சமூகம் கூட இன்று வரலாற்றுப் பாடத்தை திரும்பிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தே்' ர்வுகளே
இதற்கு அடிப்படைக் காரணம். ஊதியக்குறைப்பு, இலக்கு நிர்ணயித்தல் போன்ற காரணங்களால் எண்ணற்ற கணிப்பொறி வல்லுநர்கள் தங்களது வேலைவாய்ப்பை பறிகொடுத்த சூழ்நிலையில் வரலாற்றுப்பாடம் கற்க திரும்புகின்றனர். வரலாறு கற்பித்த பாடத்தை நாம் மறந்ததே தற்போதைய பொருளாதாரச் சிக்கல்களுக்கும், கலாச்சார பண்பாட்டுச் சீரழிவுக்கும் முக்கிய காரணம்.