பரீட்சைக்கு நேரமாச்சு.... சோறும் வேணாம்... ஒண்ணும் வேணாம் விடும்மா...
என்றபடி பிள்ளைகள் பரபரப்பாக ஓடுவார்கள். பெற்றோர்கள் தவிப்பார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு நெருங்குகிறது. பரீட்சை காய்ச்சல் இப்போதே மாணவ–மாணவிகளை பிடித்து விட்டது. தூக்கத்தை மறந்து, சாப்பாட்டை வெறுத்து இரவு பகலாக தேர்வுக்கு
தயாராகி கொண்டிருப்பார்கள்.
என்னதான் கஷ்டப்பட்டு படித்தாலும் தேர்வு நேரத்தில் இதயம் திக் திக் என்று அடிக்கும். தூக்கம் வராது. விடிய விடிய கண் விழித்து படிப்பவர்களும் உண்டு. ஒழுங்காக சாப்பிடுவதும் கிடையாது. ஆனால் இதுவே பரீட்சையை நன்றாக எழுத முடியாதபடி கவிழ்த்து விடும்.
பொது தேர்வை எதிர் கொள்ளும் மாணவ, மாணவிகள் எந்தெந்த நேரத்தில் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று உணவியல் வல்லுனர் தாரிணி கிருஷ்ணன் மாணவர்களுக்கு இலவசமாக முகாம் நடத்தி ஆலோசனை வழங்குகிறார்.
தேர்வு நேரத்தில் மாணவர்கள் என்னென்ன சாப்பிடலாம் என்பது பற்றி அவர் கூறியதாவது:–
வருடம் முழுவதும் படிக்கிறார்கள். எனவே தேர்வில் நாம் படித்ததுதான் வரும் என்ற நம்பிக்கையோடு முதலில் தேர்வு பற்றிய பயத்தை விட வேண்டும்.
தேர்வு நாளில் எக்காரணத்தை கொண்டும் காலையில் சாப்பிடாமல் போகக் கூடாது. பெரும்பாலும் காலை 8 மணிக்கே வீட்டில் இருந்து புறப்படுவார்கள். அந்த நேரத்தில் 2 இட்லி, அல்லது தோசை உள்பட ஏதாவது லைட்டாக சாப்பிடுவது அவசியம்.
தேர்வு 10 மணிக்குதான் தொடங்கும். அதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக ஏதாவது ஒரு பழம் சாப்பிட வேண்டும். ஏனென்றால் மதியம் 1 மணி வரை காலையில் சாப்பிட்ட உணவு பசி தாங்காது.
மதியம் வீட்டுக்கு வந்ததும் மதிய உணவை சாப்பிட்டு விட்டு குறைந்தது அரைமணி நேரம் பிடித்தமான ஏதாவது பொழுது போக்கில் ஈடுபட வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்கும்.
இரவில் 2 மணி வரை கண் விழித்து படித்து விட்டு காலையில் தாமதமாக எழும்புவார்கள் அது தவறு. குறைந்தது 7 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். அது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
பரீட்சை ஹாலை விட்டு வெளியே வந்ததும் ஐஸ்கிரீம் அல்லது நொறுக்கு தீனி சாப்பிடுவார்கள். அதற்கு பதிலாக கொய்யா பழம், கேரட், வெள்ளரிக்காய்கள் சாப்பிடலாம்.
பிற்பகலில் நொறுக்கு தீனிக்கு பதிலாக அரிசி பொரி, உப்பு கடலை, வேர்கடலை, முளை கட்டிய பயிறு போன்ற வகைகளை சாப்பிடலாம்.
புரதசத்து மிகுந்த உணவு வகைகளை சாப்பிடலாம். பருப்பு வகைகள், சாம்பார் சாப்பிடுவது நல்லது. இரவில் படித்து விட்டு லேட்டாக தூங்க சென்றால் ஏதாவது பழங்களை சாப்பிட்டு விட்டு தூங்க வேண்டும்.
இப்படி கட்டுப்பாட்டோடு, சத்தான உணவு களை சாப்பிட்டால் உடலும், மனதும் லேசாகி விடும். தேர்வு எழுதும்போது உற்சாகமாக இருக்கும்.
மாணவர்களுக்கு உதவுவதற்காக கடந்த 5 வருடங்களாக இந்த முகாமை நடத்துகிறேன். போனில் முன் அனுமதி வாங்கி விட்டு முகாமுக்கு வரலாம். கட்டணம் கிடையாது. போன் : 99400 76302
இவ்வாறு அவர் கூறினார்.
வளமான, வலிமையான தலைமுறையை உருவாக்க தங்களால் முடிந்ததை ஒவ்வொருவரும் செய்யத்தான் செய்கிறார்கள். நல்ல விஷயங்களை கற்று கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.