ரத்த தானம் செய்வது எப்படி : டாக்டர்கள் ஆலோசனை


"ஒவ்வொரு இரண்டு வினாடிக்குள்ளும், யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுவதால், ரத்த தானம் செய்வது அவசியம்,' என்கின்றனர், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி டீன் துளசிராம், டாக்டர் முத்து செல்லக்குமார். ரத்த தானம் குறித்து, அவர்கள் கூறியதாவது: ஆரோக்கியமான மனிதனின் உடலில், ஐந்து முதல் ஆறு லிட்டர் ரத்தம்
இருக்கும். யாருக்கு தேவைப்படும்: சாலை விபத்தில், பிரசவத்தின் போது, சிவப்பணு உற்பத்தி குறைவால், அறுவை சிகிச்சையின் போது, கட்டுவிரியன் பாம்புக்கடி பாதிப்பால், குடல், கல்லீரல், புற்று நோய்களால், ரத்த வாந்தியால், ரத்தசோகை, ரத்தம் உறையாத நோய்கள், தீக்காயம், விஷமருந்தியவர்களுக்கு ரத்த தானம் தேவைப் படுகிறது. ஆரோக்கியமான, குறைந்தது 45 கிலோ எடையுள்ள, 18 முதல் 60 வயதுள்ளவர்களின் ரத்தத்தில் 12.5 கிராம் ஹீமோகுளோபின் இருந்தால், ரத்ததானம் செய்யலாம். ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒருமுறையும் தானம் செய்யலாம். 10 முதல் 15 நிமிடங்களில் 350 மில்லி ரத்தம், தானமாக பெறப்படும். தானம் செய்த 24 மணி நேரத்தில் ரத்தத்தின் பிளாஸ்மா, சிவப்பணுக்கள் உற்பத்தியாகி, 21 நாட்களில் சீராகி விடும். எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, ரத்தம் உறையா நோய், இருதய, கல்லீரல், சிறுநீரக, தைராய்டு சுரப்பி குறைபாடு உள்ளவர்கள், ஆஸ்துமா, மனநோய் பாதிப்பு, இளம் வயது நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்ய முடியாது. தமிழகத்தில் 45 சதவீதம், "ஓ' பிரிவு, 20 சதவீதம் "ஏ' பிரிவு, 30 சதவீதம் "பி' பிரிவு, 5 சதவீதம் "ஏபி' பிரிவு ரத்த வகையினர் உள்ளனர். "ஏபி' வகையில், "ஆர்எச் நெகடிவ்' வகை, மிக அரிதாக உள்ளது. தானமாக பெறப்படும் ரத்தம், சுத்திகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு பின் நோயாளிக்கு செலுத்தப்படுவதால், பிரச்னை இல்லை. ஒருமுறை கொடுக்கும் ரத்தம், நான்கு உயிர்களை காப்பாற்றுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...