குடிமகன்’கள் காலில் விழுந்து கெஞ்சி மதுவுக்கு எதிராக நூதன போராட்டம் திருப்பூரில் பரபரப்பு

மது குடிக்காதீர் என்ற பேனருடன் நூதன போராட்டம் நடத்திய காந்திய மக்கள் இயக்க நிர்வாகியால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி வில்லியனு£ர் தொண்டமான் நத்தம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா(51). காந்திய மக்கள் இயக்கத்தின் மது ஒழிப்பு இயக்க மாநில துணை
செயலாளராக உள்ளார். இவர் கடந்த சில மாதமாக சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் மதுவால் ஏற்படும் தீமை குறித்து பொதுமக்களிடையே பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று திருப்பூர் வந்த அவர், பி.என்.ரோடு அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து, கால்களை பிடித்து கெஞ்சுகிறோம். மதுவை குடித்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் நாசமாக்கி கொள்ளாதீர்கள் என்ற வாசகம் அடங்கிய பேனரை கழுத்தில் மாட்டிக்கொண்டு அங்கு மது குடிக்க வந்த குடிமகன்களிடம், மதுவால் ஏற்படும் தீமை குறித்து அறிவுரை வழங்கினார். ஆனால் அங்கு வந்த எந்த குடிமகனும், கருப்பையாவின் அறிவுரையை பொருட்படுத்தாமல், தங்கள் வேலையை செவ்வனே செய்து விட்டு சென்றனர். இவரின் இந்த செயலால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு போலீசார், கருப்பையாவை ஜீப்பில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். பின்னர் உரிய அனுமதி இல்லாமல் டாஸ்மாக் கடை முன்பு இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். இதனால் பிரச்னைதான் ஏற்படும். எனவே பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ள பகுதிகளில் வேண்டுமென்றால் பிரசாரம் செய்துகொள்ளுங்கள் என அறிவுரை வழங்கி அவரை அனுப்பி வைத்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...