பேரனின் படிப்புக்காக, கல்விக்கடன் கேட்டு மூதாட்டி தொடர்ந்த வழக்கில்
வங்கி அதிகாரி 4 வாரத்துக்குள் பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.
பாலிடெக்னிக் மாணவர்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அழகுநாச்சியாபுரத்தை சேர்ந்தவர் வேலம்மாள்(வயது 65). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில்
தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
எனக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர், என் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். என் மூத்த மகன் செல்லதுரைக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து விட்டார். அவர்களுடைய மகன் கவியரசன் எனது பராமரிப்பில் உள்ளான்.
அவனை பல சிரமங்களுக்கு இடையே எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்க வைத்தேன். பின்னர் காரியாபட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் சேர்த்தேன்.
அலைக்கழிக்கிறார்
வயது முதிர்ந்த நிலையில் வருமானம் எதுவும் ஈட்ட முடியாத காரணத்தினால் எனது பேரனின் 2–ம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதனால், ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 400 கல்விக்கடன் கேட்டு சங்கரன்கோவிலில் உள்ள ஒரு அரசு வங்கி மேலாளரை நேரில் சந்தித்து விண்ணப்பம் கொடுத்தேன்.
பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகம் கல்விகட்டணத்தை குறிப்பிட்ட அளித்த சான்றிதழையும் வங்கியில் கொடுத்தேன். ஒவ்வொரு நாளும் வங்கி மேலாளரை சந்திக்கும் போதும், மறுநாள் வரும்படி கூறி என்னை அலைக்கழித்து வருகிறார். எனவே, நான் கொடுத்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு எனது பேரனுக்கு கல்விக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
வங்கி மேலாளருக்கு உத்தரவு
இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் வி.செல்வா, வி.மலையேந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் அவருடைய பேரனுக்கு கல்விக்கடன் கேட்டு கொடுத்த விண்ணப்பத்தை வங்கி மேலாளர் 4 வாரங்களுக்குள் பரிசீலித்து கல்விக்கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.