அரிசி மீதான சேவை வரி ரத்து: மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு-THE HINDU

தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அரிசி மீதான சேவை வரியை ரத்து செய்து, மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று 2014-15 ஆம் ஆண்டுக்கான
மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது, அரிசியை சேமித்தல், கையாளுதல் போன்ற சேவைகளுக்கான சேவை வரி ரத்து செய்யப்படுவதாக அவர் அறிவித்தார்.
முன்னதாக, அரசி மீதான சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்தினார். நேற்று நடைபெற்ற திருச்சி மாநாட்டிலும் இது தொடர்பான தீர்மானத்தை திமுக நிறைவேற்றியது.
மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அரிசி மீதான சேவை வரியை கைவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் வலியுறுத்தினார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், இதே கோரிக்கையை அப்போது அவரிடம் முன்வைத்தார்.
இதேபோல், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் தொடர்ச்சியாக அரசி மீதான சேவை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...