பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோóவு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதித் (தட்கல்) திட்டத்தின் மூலம் வெள்ளி, சனி
ஆகிய இரு நாள்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நா. அருள்முருகன் வெளியிட்ட தகவல்:
தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்காத பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) அரசு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பாக சிறப்பு அனுமதித் (தக்கல்) திட்டம் மூலம் மார்ச்.14, 15 ஆகிய இரு நாள்களில் விண்ணப்பிக்கலாம். மார்ச், ஏப்ரல்-2014 -ல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அரசு தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் ஏற்கனவே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் கடந்த 11-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று பிற்பகல் முதல் இணையதளத்தின் மூலம் தோவுக்கூட அனுமதிச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து வருகிறார்கள்.
மேலும் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் விண்ணப்பிக்கத் தவறிய பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) அரசு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தோóவர்கள் சிறப்பு அனுமதித் (தட்கல்) திட்டத்தின் மூலம் இன்றும், நாளையும் (வெள்ளி, சனி) புதுக்கோட்டை பேராங்குளம் தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் இணைய தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி தேர்வுத்துறையால் விரைவில் அறிவிக்கப்படும்.