12-ம் வகுப்பு உயிரியல் வினாத்தாளில் பிழைகள்:முழு மதிப்பெண் வழங்க கோரிக்கை


12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு உயிரியல் வினாத்தாளில், பிழையாக கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கு, முழு மதிப்பெண்
வழங்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற உயிரியல் தேர்வில், ஒரு மதிப்பெண் வினா நான்கிலும், மூன்று மதிப்பெண் வினா ஒன்றிலும், பத்து மதிப்பெண் வினா ஒன்றிலும் பிழை இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பெரும்பாலான மாணவர்கள் குழப்பத்துக்குள்ளாகி தேர்வை எழுதியிருப்பதால், நன்கு படிக்கும் மாணவர்கள்கூட நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற முடியாத நிலை உள்ளதாக மாணவர்களும் பெற்றோரும் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே பிழையாக இருந்த வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...