'15 வீட்டுக்கு ஒருத்தர் என ஓட்டு சேகரிக்க வேண்டும்'


''மத்திய சென்னை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற வைக்க, 15 வீட்டுக்கு ஒருத்தர் என, அ.தி.மு.க.,வினர்
ஓட்டுகளை சேகரிக்க வேண்டும்,'' என, ஏழுகிணறில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சைதை துரைசாமி தெரிவித்தார்.ஆலோசனை கூட்டம்
மத்திய சென்னை தொகுதி, துறைமுகத்தில், தேர்தல் பணியாற்றுவது குறித்து, அ.தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம், ஏழுகிணறில் நேற்று நடைபெற்றது.பல்வேறு குறைகள்
கூட்டத்தில், மாநகர மேயர் சைதை துரைசாமி பேசுகையில், ''நமக்குள் பல்வேறு குறைகள், குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவற்றை மறந்து, தேர்தலில் சிறப்பாக பணியாற்றி, நம் வேட்பாளர் விஜயகுமாரை வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்கு, 15 வீட்டுக்கு ஒருத்தர் என, அ.தி.மு.க.,வினர், ஓட்டுகளை சேகரிக்க வேண்டும்,'' என்றார்.
முன்னதாக, ஆலோசனை கூட்டத்திற்கான மேடையில் இருந்த, 55வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணா ரெட்டியை, மேடையில் இருந்து இறக்குமாறு, அ.தி.மு.க.,வினர் கூறியதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.'அடைமொழி' அ.தி.மு.க.,வினர்!சென்னை ஏழுகிணறில் நடந்த அ.தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில், மேயர் துரைசாமி பேசியபோது, 'தக்காளி'ரவி, 'கறிவேப்பிலை' குமார், 'பிராட்வே' குமார், 'லண்டன்' இளங்கோ என, வரிசையாக, அடைமொழி நிர்வாகிகளின் பெயரை படித்து, வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்' என, கேட்டு கொண்டார். இதை முன்வரிசையில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த மகளிர் அணியினர், 'அடைமொழி இருந்தால் தான் பெயர் படிக்கப்படும் என்பதை தெரிந்தே, பலர், அடைமொழி வைத்து கொள்கின்றனர். இனி, நாமளும் மூக்குத்தி முனியம்மா, கம்மல் கமலா என, அடைமொழியுடன் பெயர் வைத்து கொள்ள வேண்டும்' என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...