பிளஸ் 2 உயிரியல் பாட தேர்வில் மூன்று, ஒரு மதிப்பெண் கேள்விகள், தவறாக
கேட்கப்பட்டுள்ளன. இதற்குரிய மூன்று
மதிப்பெண்ணை தேர்வுத்துறை வழங்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த 20ம் தேதி, உயிரியல், தாவரவியல் தேர்வு நடந்தது. உயிரியல் பாடத்தில் இருந்து 75 மதிப்பெண், தாவரவியல் பாடத்தில் இருந்து 75 மதிப்பெண் என, 150 மதிப்பெண்களுக்கு, எழுத்து தேர்வு நடக்கிறது. இதில் மூன்று கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருப்பது, தற்போது தெரிய வந்துள்ளது. இந்த மூன்று கேள்விகளுக்கும், தலா ஒரு மதிப்பெண் வீதம், மூன்று மதிப்பெண் வழங்குவது தான் சரியான முடிவாக இருக்கும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜனிடம் கேட்ட போது, "பாட நிபுணர் குழுவிடம் ஆலோசனை கேட்கப்படும். கேள்விகள் தவறு என அவர்கள் தெரிவித்தால், அதற்கான மதிப்பெண் வழங்கப்படும்" என்றார்.