பிளஸ் 2 விடைத்தாள்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கான கட்டணம் ஓரிரு நாளில் வழங்கப்படும்:அரசுத் தேர்வுகள் இயக்ககம்

பிளஸ் 2 விடைத்தாள்கள் இந்த ஆண்டு தேர்வு மையங்களிலிருந்து அரசு சார்பில் பணியமர்த்தப்படும் வாகனங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.
இதற்கான கட்டணம் ஓரிரு நாளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் சார்பில் பிளஸ் 2 விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பான மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய தேர்வுத்துறை அதிகாரிகள், விடைத்தாள்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கான கட்டணம் வழங்குவது தொடர்பான பரிந்துரை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் ஓரிரு நாளில் இதற்கான தொகை திருப்பி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
பள்ளிகளின் மூலம் 8.26 லட்சம் பேரும், தனித்தேர்வர்களாக 53 ஆயிரம் பேரும் பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர். இவர்களின் விடைத்தாள்களைத் திருத்துவதற்காக, மாநிலம் முழுவதும் 66 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...