+2 கணித பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு மதிப்பெண் வழங்கப்படுமா?


இன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதத் தேர்வில் ஆறு மதிப்பெண் பகுதியில்
(பகுதி ஆ) வினா எண் 47 ல்
“lim┬(x→0+)⁡〖x^2 〖log⁡e〗^x 〗 என்பதன் மதிப்புக் காண்க” என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது. ஆனால் இந்த கேள்வி பாட புத்தகத்தில் பயிற்சி 5.6 ல் – 9 ம் கணக்காக “lim┬(x→0+)⁡〖x^2 log_e⁡x 〗 என்பதன் மதிப்புக் காண்க” என இடம்பெற்றுள்ளது. எனவே இதற்க்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பாட புத்தகத்தில் இல்லாமல் உருவாக்கப்பட்ட வினா ஆறு மதிப்பெண் பகுதியில் ஒன்றுதான் கேட்டகப்பட வேண்டும். இதே வினாத்தாளில் கேள்வி எண் 41 பாட புத்தகத்திற்கு வெளியிலிருந்து கேட்க்கப்பட்டுள்ளதால் வினா எண் 47 க்கு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் கட்டாய வினாப் பகுதியும் கடினமாக இருந்து என மாணவர்கள் தெரிவித்தனர். பொதுவாக கணிதத் தேர்வு சற்று கடினமாகவே கேட்கப்பட்டு இருந்தது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...