தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
பிரவீன் குமார் மேற்பார்வையில் தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 6 பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிக்கான தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:
1) திருவள்ளூர் (தனி) - கே.வீரராகவராவ் (கலெக்டர்)
2) சென்னை வடக்கு - எம்.லட்சுமி (மாநகராட்சி இணை ஆணையர்)
3) தென் சென்னை - ஆர்.ஆனந்தகுமார் (மாநகராட்சி இணை ஆணையர்)
4) மத்திய சென்னை - ஜி.கே.அருண்சுந்தர் தயாளன் (மாநகராட்சி கூடுதல் இணை ஆணையர்)
5) ஸ்ரீபெரும்புதூர் - எம்.சம்பத்குமார் (காஞ்சிபுரம் டிஆர்ஓ)
6) காஞ்சிபுரம் (தனி) - கே.பாஸ்கரன் (கலெக்டர்)
7) அரக்கோணம் - கே.பலராமன் (வேலூர் கூடுதல் கலெக்டர்)
8) வேலூர் - ஆர்.நந்தகோபால் (கலெக்டர்)
9) கிருஷ்ணகிரி - டி.பி.ராஜேஷ் (கலெக்டர்)
10) தர்மபுரி - கே.விவேகானந்தன் (கலெக்டர்)
11) திருவண்ணாமலை - ஏ.ஞானசேகரன் (கலெக்டர்)
12) ஆரணி - டி.என்.பத்மஜா தேவி (செய்யாறு, சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி)
13) விழுப்புரம் (தனி) - வி.சம்பத் (கலெக்டர்)
14) கள்ளக்குறிச்சி - எம்.செல்வராஜ் (மாவட்ட வருவாய் அதிகாரி)
15) சேலம் - கே.மகரபூஷணம் (கலெக்டர்)
16) நாமக்கல் - வி.தட்சிணாமூர்த்தி (கலெக்டர்)
17) ஈரோடு - வி.கே.சண்முகம் (கலெக்டர்)
18) திருப்பூர் - ஜி.கோவிந்தராஜ் (கலெக்டர்)
19) நீலகிரி (தனி) - சங்கர் (கலெக்டர்)
20) கோவை - அர்ச்சனா பட்நாயக் (கலெக்டர்)
21) பொள்ளாச்சி - கே.கற்பகம் (கோவை கூடுதல் கலெக்டர்)
22) திண்டுக்கல் - என்.வெங்கடாச்சலம் (கலெக்டர்)
23) கரூர் - எஸ்.ஜெயந்தி (கலெக்டர்)
24) திருச்சி - ஜெயஸ்ரீ முரளிதரன் (கலெக்டர்)
25) பெரம்பலூர் - தாரீஸ் அகமது (கலெக்டர்)
26) கடலூர் - ஆர்.கிர்லோஷ் குமார் (கலெக்டர்)
27) சிதம்பரம் (தனி) - இ.சரவணவேல்ராஜ் (அரியலூர் கலெக்டர்)
28) மயிலாடுதுறை - டி.முனுசாமி (நாகப்பட்டினம் கலெக்டர்)
29) நாகப்பட்டினம் (தனி) - எஸ்.நடராஜன் (திருவாரூர் கலெக்டர்)
30) தஞ்சாவூர் - என்.சுப்பையன் (கலெக்டர்)
31) சிவகங்கை - வி.ராஜாராமன் (கலெக்டர்)
32) மதுரை - எல்.சுப்பிரமணியன் (கலெக்டர்)
33) தேனி - கே.எஸ்.பழனிச்சாமி (கலெக்டர்)
34) விருதுநகர் - டி.என்.ஹரிகரன் (கலெக்டர்)
35) ராமநாதபுரம் - கே.நந்தகுமார் (கலெக்டர்)
36) தூத்துக்குடி - எம்.ரவிக்குமார் (கலெக்டர்)
37) தென்காசி (தனி) - பி.உமா மகேஸ்வரி (திருநெல்வேலி மாவட்ட வருவாய் அதிகாரி)
38) திருநெல்வேலி - எம்.கருணாகரன் (கலெக்டர்)
39) கன்னியாகுமரி - எஸ்.நாகராஜன் (கலெக்டர்)
இவர்கள் அந்தந்த தொகுதிகளை தீவிரமாக கண்காணித்து தேர்தல் விதிமுறைகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.