எம்.சி.ஏ.,-எம்.பி.ஏ., நுழைவுத்தேர்வு: 45 ஆயிரம் பேர் பங்கேற்பு

எம்.சி.ஏ.,- எம்.பி.ஏ., படிப்புகளில் சேர்வதற்காக அண்ணா பல்கலை, நேற்று நடத்திய நுழைவுத்தேர்வில் 45 ஆயிரம் மாணவர்கள்
பங்கேற்றனர்.
அண்ணா பல்கலை மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில், முதுகலை படிப்புகளில் உள்ள 8,000 இடங்கள், நுழைவுதேர்வு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. 2 நாள் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வு நேற்று துவங்கியது. எம்.சி.ஏ., எம்.பி.ஏ., படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, சென்னை, கோவை உள்ளிட்ட, பல இடங்களில் நேற்று  நடந்தன.
எம்.சி.ஏ., நுழைவு தேர்வு, காலை, 10:00 மணி முதல், 12 வரையிலும், எம்.பி.ஏ., நுழைவு தேர்வு, பிற்பகல், 2:30 மணி முதல், 4:30 மணி வரையிலும் நடந்தது. எம்.சி.ஏ., தேர்வை 13 ஆயிரம் பேரும், எம்.பி.ஏ.,வுக்கான நுழைவுத் தேர்வை 32 ஆயிரம் பேரும் எழுதினர். எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு இன்று காலை, 10:00 மணி முதல் 12:00 மணி வரை நடக்கிறது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இந்த தேர்வை எழுதுகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...