50 பைசா ஸ்டாம்பின் விலை ரூ.12 கோடி நியூயார்க்கில் ஏலம் விட முடிவு


பிரிட்டிஷ் கயானா நாட்டில் 1856ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட ஒரு சென்ட் (அதாவது இந்திய மதிப்பில் சுமார் 50 பைசா) மதிப்புடைய தபால் தலை ஒன்று நியூயார்க்கில் உள்ள சோத்பே ஏல  மையத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. அப்போது இந்த பழங்கால ஸ்டாம்ப் ரூ.12 கோடி வரை விற்கப்படலாம் என தபால் தலை மற்றும் பழங்கால பொருட்கள் சேகரிப்பு துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 14ம் தேதி லண்டனில் உள்ள ராயல் ஸ்டாம்பு ஆராய்ச்சி கழக நிபுணர்கள் இதுகுறித்து சிறப்பு கூட்டம் ஒன்றை கூடி விவாதித்தனர்.

பிரிட்டிஷ் கயானாவில் 1856ம் ஆண்டு பழுப்பு நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள இந்த ஒரு சென்ட் மதிப்புள்ள ஸ்டாம்பின் வரலாறு மற்றும் கலாசார முக்கியத்துவம் மற்றும் அவற்றின் உண்மை தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்து இதன் விலை மதிப்பிடப்பட்டது என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்த ஸ்டாம்ப் சமீபத்தில் தொழில் அதிபராக விளங்கிய ஜான் டூபான்ட் என்பவருக்கு சொந்தமானதாக இருந்தது. பின்னர் இது நியூயார்க்கில் உள்ள சோத்பே மியூசியத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அதன் உறுப்பினர்கள் தெரிவித்தனர். உலகிலேயே மிகவும் பழமையான ஸ்டாம்ப் இதற்கு முன்பு இவ்வளவு விலைக்கு மதிப்பிடப்பட்டதில்லை என ஏல மைய நிபுணர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...